அத்திலாந்திக் சமுத்திரத்தில் இடம்பெற்ற சூறாவளிகளில் மிகவும் பெரிய சூறாவளியாக அண்மையில் வீசிய சண்டி (Hurricane Sandy) எனப்படும் சூறாவளி விளங்குகின்றது. இவ்வருடம் (2012) ஒக்டோபர் 22 ஆம் திகதி தோற்றம் பெற்ற சூறாவளியானது , ஒக்டோபர் 31 ஆம் திகதி தனது ஓய்வு நிலைக்கு வந்திருந்தது. சண்டியின் மூலம் ஆகக்குறைந்தது 52.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், 193 பேர் உயிரிழந்தும், 60 மில்லியனுக்கும் அதிமானோர் பாதிக்கப்படவும் காரணமாக அமைந்தது.
சண்டி சூறாவளியினால், ஐக்கிய அமெரிக்காவினுடைய 24 மாநிலங்கள் அதுவும் குறிப்பாக கிழக்கு பகுதிகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளகியிருந்தன. புளோரிடா தொடக்கம் மெயின் மற்றும் மிச்சிகன், விஸ்கொன்சின், நியுஜேர்சி, நியுயோர்க் ஆகிய மாநிலங்கள் இப்புயலின் அதிக பாதிப்பை எதிர்நோக்கியிருந்தன.
இச் சூறாவளியின் மூலம் ஐக்கிய அமெரிக்கா மாத்திரமன்றி யமேக்கா, கெயிட்டி, டொமினிக்கன் குடியரசு, போட்டாரிக்கா, பகாமாஸ், கியூபா, கனடா ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சண்டி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் | |||
நாடு | மரணம் | காணாமல் போனோர் | பாதிப்பு(ஐக்கிய அமெரிக்க டொலர்) |
ஐக்கிய அமெரிக்கா(United States) | 121 | 1 | $50 billion (estimated) |
கெயிட்டி( Haiti) | 54 | 21 | $74 million (estimated) |
கியூபா( Cuba) | 11 | 0 | $2 billion (estimated) |
பகாமாஸ் ( Bahamas) | 2 | 0 | $300 million (estimated) |
கனடா(Canada) | 2 | 0 | Unknown |
டொமினிக்கன் குடியரசு (Dominican Republic) | 2 | 0 | Unknown |
யமேக்கா(Jamaica) | 1 | 0 | $55.23 million (estimated) |
பேர்முடா ( Bermuda) | 0 | 0 | Unknown |
Total | 193 | 22 | >$52.4 billion (estimated) |
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
