தற்போதும் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனால் சித்தாண்டி 04, சித்தாண்டி 03 போன்ற பகுதிகளின் எல்லைப் பகுதிகள் வெள்ளத்துள் விரைவில் மூழ்கிவிடும் அபாயம் காணப்படுகின்றது. சந்தணமடு ஆறு வீதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் சித்தாண்டி 04 மாரியம்மன் ஆலயத்திற்க அருகிலுள்ள பகுதியிலிருந்து பெருமாவெளி வரையிலான இயந்திரப்படகு சேவை தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது.
மாவடிவேம்பு பிரதேசத்திலும் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளநீர் வீதிகளிலும், மக்களின் நிலங்களிலும் தேங்கிக் காணப்படுகின்றது. தேங்கிக் காணப்படும் நீரை அகற்றுவதற்காக கடந்த வருடங்களில் அமைக்கப்பட்ட சில நெடுக்கு தற்காலிக கால்வாய்களை ஆழமாக்கி நீரைவடியச் செய்வதற்கு மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டார். இதற்காக செங்கலடி பிரதேச சபைக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய் ஆழமாக்கப்பட்டு நீர் வடியவிடச் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கிரான் பாலத்திற்கு மேலாக அதிகவேகத்துடனும், அதிகமாகவும் நீர் பாய்ந்து வருவதனால் கிரான்பாலத்திற்கூடான தரைவழிப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது. இயந்திரப் படகுச் சேவையின் மூலமான போக்குவரத்தே இங்கும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.