சித்தாண்டியில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயற்றிட்டம்

(Rajan) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஆரம்ப கலந்துரையாடல் நேற்றையதினம் (06.03.2014)  பாடசாலை அதிபர் தி.ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கிழக்கு மகாண முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜா, பாடசாலையின் முன்னாள் அதிபரும், செயற்றிட்ட இணைப்பாளருமான வ.பஞ்சலிங்கம், தரம் 11 மாணவாகள்  மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பழையமையான இப்பாடசாலையின் கடந்த சிஜல வருடங்களாக பரீட்சைப் பெறுபேறுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வீழ்ச்சி நிலையினை கருத்திற்கொண்டு , மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு  அடிப்படையாக அமையவிருக்கின்ற இச்செயற்றிட்டத்திற்கு  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது நிதியுதவி வழங்கியுள்ளது.

இச்செயற்றிட்டத்திற்கு இணைப்பாளராக முன்னாள் பாடசாலை அதிபரான வ.பஞ்சலிங்கம் அவர்கள் செயற்படுவதுடன், பாடசாலையின் அதிபர் திரு. தி.ரவி அவர்களின் தலைமையில் செயற்றிட்டமானது மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 







Previous Post Next Post