மட்டக்களப்பின் சுற்றுலா அம்சங்கள்

இலங்கையின் அழகு நிறைந்த சுற்றுலா அம்சங்களாக கடல்பிரதேசம், களப்புக்கள், ஆறுகள், குளங்கள் எச்சக்குன்றுகள், மலைத்தொடர்கள், வெளியரும்புப் பாறைகள், புல்வெளிகள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களும் அமைந்து காணப்படுகின்றன. இவற்றுள் ஒரே மாவட்டத்தில் அனைத்து அம்சங்களையும் அல்லது அதிகளவான அம்சங்களை காணமுடியாது. ஏதாவது ஒருசில அம்சங்களே முதன்மையாகக் காணப்படும்.


இலங்கையில் காணப்படும் 25 மாவட்டங்களும் ஏதோ ஒரு வகையில் சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தை எடுத்தால் அழகிய மலைத்தொடர்களும், நீர்வீழ்ச்சிகளும் காணப்படுவதுடன், கொழும்பை எடுத்தால் சிறுவர்களின் இரசனைக்கேற்ற மிருகக் காட்சிச் சாலைகள் மற்றும் உருவாக்கப்பட்ட சுற்றுலா அம்சங்களுக்கும் பிரசித்தி பெற்றுக் காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகின்றபோது பெருமளவிலான சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளமை மறுக்கமுடியாத ஒன்றாகும். அந்தவகையில் பின்வரும் பிரதான அம்சங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்டுகளிக்ககூடியவாறு காணப்படுகின்றன. 

சமய ஆலயங்கள்
புராதன அம்சங்கள்
கடற்கரைகள்
மலைகள் மற்றும் குன்றுகள்
காடு சார்ந்த பிரதேசங்கள்
குளங்கள் மற்றும் வயல்வெளிகள்
களப்பு மற்றும் கண்டல் தாவரங்கள்
ஆறுகளும் பருவகால நீர்வீழ்ச்சிகளும்
வேறுபட்ட பயிர்ச்செய்கை நிலங்கள் எனப் பாகுபடுத்தலாம்.



மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா வலயங்கள்.
1. பாசிக்குடா மற்றும் அதனை அண்டிய கரையோரம்
2. வாகரை பிரதேசத்தை உள்ளடக்கிய கரையோரம்
3. குடும்பிமலையை சுற்றியுள்ள வனப்பிரதேசம்
4. மட்டக்களப்பு நகரை சுற்றியுள்ள பிரதேசம்
5. பட்டிருப்பை சுற்றியுள்ள பிரதேசம்
6. படுவான் கரைப் பிரதேசம்
7. ஈரளக்குளத்தை சுற்றியுள்ள பிரதேசம்


தெரிவு 01 - ஒரு நாள் சுற்றுலாவில் பார்வையிடக்கூடிய ஒரு திட்டமிடல் 
(படுவான் கரை சார்ந்த சுற்றுலாப் பிரதேசங்கள்)
குசலான மலை முருகன் கோவில்
உறுகாமம் குளம்
உன்னிச்சைக் குளம்
தாந்ததாமலை முருகன் கோவில்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சிரம்
கல்லடி கடற்கரை
மட்டுநகர் காந்தி பூங்காப் பிரதேசம்


தெரிவு 02 - ஒரு நாள் சுற்றுலாவில் பார்வையிடக்கூடிய ஒரு திட்டமிடல் 
(குடும்பிமலை மற்றும் பாசிக்குடா சார்ந்த பிரதேசங்கள்)
குடும்பிமலை வனப்பிரதேசம்
குடும்பிமலைக் குன்று
ஆத்திக் காட்டுக் குளம்
மியான்கல் குளம்
பாசிக்குடா

தெரிவு 03 - ஒரு நாள் சுற்றுலாவில் பார்வையிடக்கூடிய ஒரு திட்டமிடல் 
(மட்டு நகரைச்; சூழவுள்ள பிரதேசங்கள்)
மட்டுநகர் காந்திபூங்காப் பிரதேசம்
கல்லடி கடற்கரை பிரதேசம்
கொக்குத்தீவு
அமிர்தகளி மாமாங்கேஸ்வரர் ஆலயம்
மைலம்பாவெளி காமாட்சிஅ ம்மன் ஆலயம்


(கட்டுரை தொடரும்)
குறிப்பு:-  படங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அனுப்ப விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கூடாக அனுப்பி வைப்பதன் மூலம் இக்கட்டுரையின் வளர்ச்சிக்கு உதவிசெய்யமுடியும்.

Email:-  kudumbimalai@gmail.com














Previous Post Next Post