கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், இந்த பேரணியில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாச்சார, விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, சிறப்பு அதிதியாக கலந்து கொண்டுள்ளார். முதலாம் நாள் அரங்க நிகழ்வு ஆய்வரங்கம், 'கிழக்கின் சமகால இலக்கிய முயற்சிகள்' என்ற தலைப்பில், ஓய்வு நிலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில், அன்புமணி அரங்கில் காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் எம்.ஜிப்ரி ஹஸன், விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம், திரைப்படப் படைப்பாளி காசிநாதர் ஞானதாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகர் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
Previous Post Next Post