புவியின் நிலைப்பில் பாதகத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அது கட்டுப்படுத்தப்படவேண்டியது அவசியமானதாகும். எவ்வாறு காடுவளர்ப்பது அவசியமோ அதே போன்றுதான் நாம் இங்கு குறிப்பிடப்போகும் செடியையும் சூழலில் இருந்துது அழிக்கவேண்டியது அவசியமானதாகும். பேராண்மை திரைப்படத்தில் ஜெயம்ரவி அவருடைய மாணவர்களிடம் அழிக்கப்படவேண்டிய மரம் எனக்காட்டி வெட்டுகின்ற மரத்தை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கலாம். இந்த மரத்தின் விஞ்ஞானப் பெயர் பாத்தினியம் செடி என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் அல்லது தமிழில் இதனை "காட்டுக்கருவேல மரம்" என அழைக்கிறார்கள்.
இந்த மரங்கள் எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும். அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும். ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்.
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது. தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த மரங்கள் ஒட்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம். மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல் வேரோடு புடுங்கி எறியுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் குறிப்பிடும் இணையத்தளத்திலும் சென்று வாசித்தறியுங்கள்.1. http://www.pasumaividiyal.org 2. http://muktibiotech.com3. http://en.wikipedia.org/wiki/Parthenium