சித்தாண்டி மற்றும் பல கிராமங்கள் வெள்ளத்தில்

(Suman & Seelan ) மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சித்தாண்டி மற்றும் தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆற்று வடிநிலங்களினூடாக வந்து சேருகின்ற நீர் மற்றும் குளங்களின் வடிச்சல் பகுதிகளினூடாக வெளியேறி வரும் நீர் போன்றவற்றினாலும் இந்த வெள்ளநிலைமை ஏற்பட்டுள்ளது. 


சித்தாண்டி 04, 03 கிராமசேவகர் பகுதிகளில் வசித்துவரும் பெரும்பாலோனோர் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  (19) காலை 8.30 மணி முதல் இன்றுகாலை (20) 8.30 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பில் 147.8, மயிலம்பாவெளியில் 98.7, பாசிக்குடாவில் 126.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

அத்துடன் இன்று காலை வரையில் 

தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு வருகின்றமையினால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டப்படுகின்றார்கள். 










 
Previous Post Next Post