செவ்வாய் கிரகத்தில் நீரோடை(Stream) இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் (Gravel) பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி(Curiosity) விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளைக் கற்களின் (Gravel) பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. நிச்சமயாக நீரோடை (Stream) தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியாசிட்டி விஞ்ஞானி ரெபக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

