தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2012

சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேசத்தில் கல்வி வழங்கி வரும் தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (13.11.2012) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.


கல்வி நிலையத்தின் ஸ்தாபகரான அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முனனிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவினை கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் தலைமையேற்று நடாத்தியிருந்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவடிவேம்பு 02 கிராமசேவகர் திரு. பூ.அருள்நாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன், கல்வி நிலைய ஆலோசகர் சி.சித்தார்த்தன், கலாசார இணைப்பாளர் க.சிவா, பெற்றோர் சங்க அமைப்பாளர் மா.சபாரெத்தினம் மற்றும் கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கல்வி நிலைய ஸ்தாபரின் நினைவு தினத்தில் பரிசளிப்பு நிகழ்வுடன், பசுமை எனப்படும் சஞ்சிகை வெளியீடும் அத்துடன் இத்தடவை விசேடமாக ஸ்தாபகரின் ஞாபகர்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தள அறிமுகமும் இடம்பெற்றது. சித்தாண்டி, மாவடிவேம்பு மற்றும் அறிவியல், பொதுஅறிவு, சினிமா முதலிய செய்திகளைத் தாங்கி வெளிவரும்  மாரிமுத்தன் செய்திகள் (www.marimuththan.blogspot.com) எனும் இணையத்தளத்தின் அறிமுக நிகழ்வினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமசேகவகர்  திரு. பூ.அருள்நாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். 





















Previous Post Next Post