04 November 2011

முறாக்கமடு படகு போக்குவரத்து

SHARE
வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மட்டக்களப்பின் பெரும்பாலான ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. சந்தணமடு ஆற்றிலும் நீர் மட்டம் அதிகிரித்துள்ளது.
தமது விளைநிலங்களுக்கும் சந்தணமடு ஆற்றுக்கு மறுகரையில் உள்ள பிரதேசங்களுக்குமான தரைவழிப் போக்குவரத்தில் இடர்பாடுகள் தோற்றம்பெற்றுள்ளன. பெரும்பாலான வீதிகள் நீரினால் இடையிடையே மூடப்பட்டுள்ளதுடன், ஆற்றினுடைய ஆழம் காரணமாக முறாக்கமடு பகுதியினால் மாத்திரமே மக்கள் படகிலேயே பயணம் செய்து வருகின்றனர்.







SHARE

Author: verified_user