Showing posts with label வந்தாறுமூலை. Show all posts
Showing posts with label வந்தாறுமூலை. Show all posts

30 December 2015

விவசாயி குறும்படம் இணையத்தளத்தில்(YouTube link)

விவசாயி குறும்படம் இணையத்தளத்தில்(YouTube link)





விவசாயி குறும்படம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதுடன், உங்களது நன்பர்களுக்கும் இந்த இணைப்பினை பகிர்ந்து உங்களது ஆதரவைத் தரும்படி கேட்டுக்கொள்கின்றோம். 




சேற்றிலே காலை வைத்து பலர் வீட்டிலே சோற்றைக் கொடுக்கும் உன்னத மனிதர்களான விவசாயிகளின் வாழ்வியல் முறைகள் சிலவற்றை அடிப்படையாகவும், பிரதேச இயற்கைக் காட்சிகளையும் இணைத்து விவசாயி எனும் குறும்திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.












நானிலம் கலைக்குழுமம் பெருமையுடன் வழங்கும் இக்குறும்படத்தில் சபாரெத்தினம், சிவாங்கன், விஜிகரன், பிரதீபன், நேசம்மா மற்றும் பல கலைஞர்கள் நடிக்கின்றனர்.




படத்திற்கு கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என்பவற்றை அக்சயன் அவர்கள் மேற்கொள்ள ஒப்பனையினை சுமனும், இசை ஒருங்கிணைப்பினை மிதுசனும் மேற்கொள்ள குறும்படத்தினை தேவராஜ் அவர்கள் தயாரிக்கின்றார்.











விவசாயி குறும்படமடானது விவசாயத்தினை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய ஒரு குறும்படம் ஆகும்.







VIVASAYI Short film


















விவசாயி குறும்பட வெளியீட்டு நிகழ்வு

விவசாயி குறும்பட வெளியீட்டு நிகழ்வு




சித்தாண்டி, வந்தாறுமூலை, மாவடிவேம்பு கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவான "விவசாயி" குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வானது வந்தாறுமூலை தரிசன ஒன்றிய மண்டபத்தில் நானிலம் கலைக்குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று (27.12.2015) சிறப்பாக நடைபெற்றது.








இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. உ.உதயசிறிதர் (பிரதேச செயலாளர், ஏறாவூர்ப் பற்று) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. க.சூரியகுமாரன் (பணிப்பாளர், வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், திரு. ஏ.கந்தசாமி (பெரும்பாக உத்தியோகத்தர், கமநல கேந்திர நிலையம், வந்தாறுமூலை) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. Pசிவராம் (கலாசார உத்தியோகத்தர்) அவர்களும், திரு. K.S.R. சிவகுமார்(கலாசார உத்தியோகத்தர்), திரு. Y.குகநாத் (பொறியியல் உதவியாளர்), திரு. M.கலைமோகன் (விவசாய போதனாசிரியர்), திரு. R.பிரபாகரன் (விவசாய போதனாசிரியர்), திருமதி. J.புவீந்திரன் (ஆசிரியர்), திரு. R.நாகேந்திரன் (ஆசிரியர்) அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.


மேலும் இந்நிகழ்வில் நானிலம் கலைக் குழுமத்தின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.


இக்பகுறும்படமானது தேவராஜ் அவர்களின் தயாரிப்பிலும், அக்சயன் அவர்களின் இயக்கத்திலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.





































































14 June 2015

மாகாண மட்ட விளையாட்டு போட்டி 2015

மாகாண மட்ட விளையாட்டு போட்டி 2015





 மாகாண மட்ட விளையாட்டு போட்டி நேற்று சனிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளும் இவ் விளையாட்டு போட்டி இங்கு  நடைபெற்றது.













இந்த விளையாட்டு நிகழ்வில் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம்,விஷ்ணு மகா வித்தியாலயம் ,செங்கலடி மத்திய கல்லூரி போன்ற  பல பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.இது மட்டுமன்றி சாதனைகளும் நிலைநாட்டப்பட்டதும் சிறப்பானது.





இந்த விளையாட்டு நிகழ்வில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பதக்க மாலைகளும் வழங்கி கௌரவிக்க பட்டனர்.





இம் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் தேசியமட்ட விளையாட்டில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.














13 June 2015

வந்தாறுமூலையில் கண்ணகி கலை இலக்கிய விழா பண்பாட்டு பவனி -2015

வந்தாறுமூலையில் கண்ணகி கலை இலக்கிய விழா பண்பாட்டு பவனி -2015





(Dilaxshan)கண்ணகி கலை இலக்கிய விழா பண்பாட்டு பவனி இன்று13.06.2015 காலை 8 மணியளவில் சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்து வாகன பேரணி மற்றும் பாடசாலை மாணவர்களுடன் வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தை 9 மணிக்கு   சென்றடைந்தது.










இந் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக தமிழ் பண்பாட்டு கலை நிகழ்சிகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பிதமையும் குறிப்பிடத்தக்கது.





இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்  இறைவணக்கம் மற்றும் தமிழ் மொழி வாழ்த்து என்பன இசைக்கபட்டன. பின் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.





இங்கு இது மட்டுமன்றி பாரம்பரிய பொருட்களும் பார்வைக்காக இதற்கென அமைக்கபட்ட காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டிருந்தது.சமயம் சார்ந்த நூல்களும் இங்கு வைக்கபட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வு 14.06.2015





நாளையும் நடைபெறும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் சிறப்பானது.














08 June 2015

களுவன்கேணியை சேர்ந்த இளம் யுவதி ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலே பலி

களுவன்கேணியை சேர்ந்த இளம் யுவதி ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலே பலி







(Dilaxshan)ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட , வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.














 களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (வயது-23) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இருவரும் களுவன்கேணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த உதயா தேவி ரயிலில் மோதுண்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















03 June 2015

வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளிர்த்தி சடங்கு

வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளிர்த்தி சடங்கு


(Dilaxshan) மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு சென்ற 28.05.2015 அன்று திருக்கதவு திறத்தளுடனும்   ஆரம்பமாகி 01.06.2015 அன்று திருக்குளிர்த்தியுடன் இனிதே  நிறைவடைந்தது இதில் எராளமான அம்மன் பக்தர்கள் கலந்து கொள்வதை படத்தில் காணலாம்




05 May 2015

வந்தாறுமூலையில இந்த வஞ்சிக்கொடி... -பாடல்

வந்தாறுமூலையில இந்த வஞ்சிக்கொடி... -பாடல்

(Akshayan) வந்தாறுமூலையில இந்த வஞ்சிக்கொடிய பார்த்தேனடா ... எனத் தொடங்கும் கானாப் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்களைக் கொண்டு எழுதப்பட்ட முதலாவது காதல் கானாப்பாடலாக இது விளங்குகின்றது.

கிழக்கோரப்பாட்டு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலை ஈழத்துப் பாடகர் அருள்கிருஷ்னா அவர்கள் பாடியுள்ளதுடன், பாடலுக்கான வரிகளை கமல்ராஜ் அவர்கள் எழுத பாடலுக்கான ஒளிப்பதிவினை ரசாக் கமலரூபன்  அவர்கள் செய்திருக்கின்றார். 

கிராமங்களின் பெயர்களுடன் தொடர்புபடுத்தி காதலை அழகான முறையில் இந்தப் பாடலுக்கூடாகச் சொல்லியிருக்கின்றார் பாடலாசிரியர். ஊர்களின் பெர்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் பாடலை சிறந்த முறையில் மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய வகையில் அழகாக இசையமைத்துப் பாடியுள்ள பாடகர்,  பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டுவதுடன், இந்தப் பாடலை சார் செய்து எமது ஆதரவையும் வழங்குவோம்.


Vantharumoolaiyila intha .....Song
Please share this song in facebook .

14 February 2015

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் சிவராத்திரி - அறிவித்தல்

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் சிவராத்திரி - அறிவித்தல்

()வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தின்தை முன்னிட்டு பூஜை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற இருக்கின்றன.  பஜனை நிகழ்வுகள்,  சொற்பொழிவு மற்றும் அன்னதான நிகழ்வகளும் நடைபெறவிருக்கின்றன.


20 January 2015

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது பிறந்த தினம்

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது பிறந்த தினம்

(Akshayan)கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் 105 ஆவது வருட பூர்த்தி தினம் கடந்த 18.01.2015 (ஞாயிறு) அன்று அனுஸ்டிக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கேக் வெட்டி சிறப்பித்தனர்.