Showing posts with label அனர்த்தம். Show all posts
Showing posts with label அனர்த்தம். Show all posts

08 April 2026

காலநிலை-திறன்மிகு விவசாயம்

காலநிலை-திறன்மிகு விவசாயம்

 

1. நீர் மேலாண்மை (Water Management)

விவசாயத்தில் நீரைச் சேமிப்பதற்கும், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்குமான நுட்பங்கள்:

  • 50 லி தண்ணீரில் 350 மரங்கள் வளர்க்கும் நுட்பங்கள் - குறைந்த நீர் மேலாண்மை மற்றும் களை மேலாண்மை குறித்த விரிவான பயிற்சி வீடியோ.

  • நெல் விளைச்சலை உயர்த்த நீர் மேலாண்மை ரகசியங்கள் - நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை குறித்த நிபுணர்களின் ஆலோசனை.

  • மண், நீர் மற்றும் விதைகளைப் புரிந்து கொள்ளுதல் - அடிப்படை நீர் மேலாண்மை பயிற்சி.

11 November 2018

GAJA சூறாவளி

GAJA சூறாவளி

GAJA சூறாவளி.

தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் அந்தமான்தீவிற்கருகே காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது (Deep Depression) கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து இன்று (11.11.2018/0000 UTC) சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இது தற்போது அந்தமான்தீவின் போட் விலர் (Port Blair) இருந்து மேற்கு- வடமேற்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும் தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்து வடகிழக்காக 990 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து கிழக்கு- தென்கிழக்காக 1050 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) தோற்றம் பெறும்.

பின்னர் இது அதனையடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, பின்னர் மேற்கு- தென்மேற்கு திசையில் தனது நகரும் திசையை மாற்றி அடுத்துவரும் 48 மணித்தியாலத்தில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையிலான கரையை நோக்கி நகரும்.

இதேவேளை, இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகரும்போது இதன் வலு படிப்படியாக குறைவடைந்து சூறாவளியாக வட தமிழ்நாட்டிற்கும் தென் ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையில் எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் வேளை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Mr. K.Sooriyakumaran, meteorology department)


18 October 2017

மழை பற்றிய சகுனங்கள்...!!!

மழை பற்றிய சகுனங்கள்...!!!





மலைக்க வைக்கும் நம் முன்னோர்களின் சாதனை!!!




கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.









1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை









2. தட்டான் தாழப் பறந்தால் மழை









3. அந்தி ஈசல் அடை மழை









4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.









5. தவளை கத்தினால் மழை









6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை









7. கொக்கு மேடேறினால் மழை









8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்




பார்த்தால் மழை









9. கழுதை காதை உயர்த்தினால் மழை









10. ஈசல் பறந்தால் மழை









11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை









12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது




திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை









13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.









14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை









15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை









16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை









17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை









18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை









19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.









20. மயில்கள் நடனமாடினால் மழை









21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை









22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை









23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை









24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை









25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை









26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.









27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.









28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.









29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை









30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.









31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை









32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை









33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.









நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.....


21 May 2017

பேரில்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்

பேரில்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்


(Siva) கோறளைப்பற்று -தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவை பிரிவில் அடங்கும் கூழாவடி கிராமத்தில் தொடர்ந்து காட்டு யானைகள் மக்களின் உயிரையும் ,உடமையையும் தாக்கி அழித்தவண்ணம் உள்ளது .




இப் படங்கள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் -கிரான் , இதற்குள் உட்பட்ட பேரிலாவெளி கிராம சேவைப்பிரிவுக்குட்பட்ட கூழவடி கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயியின் இருப்பிடம் ஆகும்.



அந்த விவசாயியின் சொத்து , உடமைகள் காட்டு யானையால் முற்றாக அழிக்க பட்டு அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.





அதிகாரிகளே, அரசியல்வாதிகளே இது உங்களின் கவனத்திற்கு...
































06 January 2016

சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களில் வெள்ள அபாயம்

சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களில் வெள்ள அபாயம்



இன்று (06.01.2015) காலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மட்டக்களப்பின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களின் பல தாழ்நிலப் பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன. அத்துடன் பல கிராம உட்பகுதிகளிலும் நீர்வடிந்தோட முடியாமல் மழைநீர் தேங்கியும் காரணப்படுகின்றது.







இதே வேளை உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகளும் திறந்து விடப்பட்ட நிலையில் உள்ளமையால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


(படங்கள்: வாணன், பிரசாந்தன்)































27 December 2014

சித்தாண்டியில் மீண்டும் அதிகரித்து வரும் வெள்ளநீர்

சித்தாண்டியில் மீண்டும் அதிகரித்து வரும் வெள்ளநீர்

கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே மையம் கொண்டுள்ள தாழமுக்க நிலைமையினால் ஏற்பட்டுவரும் தொடர்மழை காரணமாகவும், உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறந்த நிலையியும் காணப்படுவதனாலும் மீண்டும் வெள்ள நீர் சித்தாண்டியை மூழ்கடித்துள்ளது.  


கடந்த இரு நாட்களுக்கு முன்னர் படிப்படியாக நீர் வடிந்து சென்றதனால் தமது உறைவிடங்களுக்கு சென்ற ஒரு சிலர் மீண்டும் நேற்றைய தினத்திலிருந்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.


26 December 2014

மட்டக்களப்பில் தொடரும் மழை: வெள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் தொடரும் மழை: வெள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு அருகே தோன்றியுள்ள தாழமுக்க நிலைமை காரமணாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தாழமுக்க மையம் இலங்கையை விட்டு அகன்று செல்லும்வரையில் தொடர்ந்தும் நிலவும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்துடன் உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலேய இருப்பதனால் உறுகாமம் குளத்தினுடைய நீர் பாய்ந்து வரும் பாதையிலுள்ள பிரதேச மக்கள் வெள்ளம் தொடர்பாக அவதானமாக இருப்பது முக்கியமானதாகும். தொடர்ந்தும் குளத்தினுடைய நீரேந்து பிரதேசங்களிலும், வடிநிலப் பிரதேசத்திலும், பாதிக்கப்படும் பிரதேசத்திலும் பலமான மழைவீழ்ச்சி நிகழுமாயின் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.



24 December 2014

மட்டக்களப்பில் தொடரும் வெள்ள நிலைமைகளின் நாளைய போக்கும் அனர்த்த முகாமைத்துவத்தின் நிலைபேண் தன்மையும்.

மட்டக்களப்பில் தொடரும் வெள்ள நிலைமைகளின் நாளைய போக்கும் அனர்த்த முகாமைத்துவத்தின் நிலைபேண் தன்மையும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள ஆபத்து நிலைமையானது மேலும் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இன்றுவரை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் சுமார் 300000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெர்ந்த நிலையில் 78 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்காக உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


மேலும் தொடரும் பருவநிலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகலாம். எனவே அரச நிறுவனங்கள், தொண்டர் தாபனங்கள் தயார்நிலையில் இருந்தாலும் அதனை மேலும் ஸ்திரப்படுத்தவேண்டிய தேவைப்பாடு உள்ளது. காரணம் எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு சாதகமானதாகத் தென்படவில்லை.

தொடர்ச்சியாக இன்று (23.12.2014) முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதோடு மழையானது இடியுடன் கூடியதாக அமையலாம் எனவும் எதிர்வுகூறப்படுகின்றது. கீழே காட்டப்பட்டுள்ள எதிர்வுகூறல் வானிலை அடையாளங்களின்படி எதிர்வரும் 10 நாட்களில் 7 நாட்கள் மழைக்குரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

3 நாட்கள் விட்டு விட்டு வானம் தெளிந்து காணப்படும். பொதுவாக வானிலை என்பது குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டலத்தின் பிரதிபலிப்பாகும். ஆகவே இத்தகைய எதிர்வு கூறல் நிலையானதல்ல அதற்குமப்பால் நிலைமை மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் மாறலாம் அம்மாற்றம் சாதகமாகவோ அல்லது மோசமாகவோ அமையலாம். இந்நிலையில் தொடர்ச்சியான வானிலை அவதானிப்புக்கள் மூலமே சரியான எதிர்வு கூறல்களை மக்களுக்கு வழங்க முடியும். இருப்பினும் இதுவரை பதிவான வானிலைத் தரவுகளின் அடிப்படையில் மழைக்குரிய நிலைமைகளே காணப்படுகின்றன.

மேற்படி தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேல் நிலவும் வளிமண்டலத்தின் இன்றைய குறித்த நேரத்துக்கான நிலைமையை நோக்கினால் எதிர்வுகூறப்பட்டவாறு மழைப் பொழிவுக்கான சாத்தியப்பாட்டையே எடுத்துக்காட்டுவதை பின்வரும் செய்மதி விம்பத்தின் மூலம் கண்டுகொள்ளலாம்.


மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வெள்ளத்துக்கான நீரானது இரண்டு வழிகளில் வந்தடைகின்றது. ஓன்று மாவட்டத்திற்குள் கிடைக்கும் கடுமையான மழைவீழ்ச்சி, மற்றயது மாவட்டத்துக்கு வெளியே குறிப்பாக மேற்கு மேனிலப் பகுதிகளிலிருந்து வருகின்ற மேலதிக நீர். இந் நீர் மட்டக்ககளப்பு மாவட்டத்திற்குள் வெள்ளத்தை ஏற்படுத்தக் காரணமான ஏதுக்களாக இரண்டு காரணிகளைக் குறிப்பிடலாம். முதலாவது காரணி,  மாவட்டத்தின் இயற்கையான புவியியல் அமைப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பகுதி தாழ்நிலச் சமவெளியாக உள்ளதனால் இங்கு வெள்ளம் ஒரு பொதுவான இடர். அதனை மாற்றியமைக்க முடியாது. இவ்விடர் பேரனத்தமாக உருவெடுப்பதற்கான இரண்டாவது காரணியாக முறையற்ற விதத்தில் இடம்பெறுகின்ற நிலப்பிரயோகங்கள், புனரமைப்பற்ற வடிகால்கள், பரவலடைந்துவரும் சிறு குளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 302 குளங்கள் காணப்படுகின்றன அவற்றுள் 206 குளங்கள் பயன்படு நிலையிலையும் 96 பயனற்ற நிலையிலும் காணப்படுகின்றது (கச்சேரி, மட்டக்களப்பு-2010ஃ11).

இங்குள்ள குளங்கள் வெறுமனே விவசாய நோக்கிலமைக்கப்படவை மட்டுமல்ல வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளாகவும் அவை செயற்பட்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக உன்னிச்சை, உறுகாமம் குளங்கள் திறக்கப்படுகின்ற வேளை வெள்ள அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. 306 குளங்களும் மட்டக்களப்பில் இல்லாதிருந்திருந்தால், அவற்றால் குறிப்பிட்டளவு நீர் தடுத்து வைக்கப்படாமல் இருக்குமாயின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். ஆகவே இன்றைய வெள்ளத்திற்கு சிறு குளங்கள் பலவற்றின் உடைப்பு, அவற்றின் கைவிடப்பட்டநிலை என்பனவற்றையும் காரணமாகக் கருத முடியும். ஆகவே பௌதீக நிலைமை, வடிகால்கள், தோணாக்கள், வாவிகள், குளங்கள், நிலப்பிரயோகங்கள் எல்லாவற்றையும் கவனத்திற்கொண்ட ஒரு அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்கு ஊடாகமட்டுமே வெள்ள ஆபத்துக்களையும், அவற்றின் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ள முடியும். இன்று மாறிக்கொண்டிருக்கும் உலக காலநிலை மாற்றம் இலங்கை;கே சவாலானதாக காணப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பில் இத்தகைய நிலைமைகளை எதிர்காலத்தில் இதனிலும் மோசமாகத் தூண்டக் கூடும்.
 
மட்டக்களப்பு மாவட்டம் அதன் தரை உருவ அடிப்படையில் வேறுபட்டது. மாவட்டத்தின் ஜதார்த்தமான தரையமைப்பினை கண்டறிந்து நிலப்பிரயோகங்களை பொருத்தமான முறையில் திட்டமிடுவது கூட வெள்ளத்தைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென அத்தகையதொரு தரையுயர மாதிரி இல்லாத நிலையிலேயே நிலப்பிரயோகங்கள் திட்டமிடப்படுகின்றன. அவற்றால் நிலப்பயன்பாட்டில் பொருத்தமற்ற மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக வாவிகள், தோணாக்கள், கால்வாய்கள் தமது நீரேந்தும், கொண்டுசெல்லும் இயற்கையான திறனை இழக்க நேரிடுகின்றது. ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அதன் தரையபைப்பை வெளிப்படுத்தும் ஒரு மாதிரி அவசியமாகின்றது. அதற்கூடாக வெளியுருவவியல் அடிப்படையில் நிலத்தை வகைப்படுத்தி அதன் பொருத்தப்பாட்டினை அடையாளம் கண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு நோக்கி ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

கீழ்வரும் படம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தரையமைப்பைக் காட்டுகின்றது. இதன்படி கரையோரத்திலிருந்து மேற்கு எல்லை நோக்கி உயர்ந்து செல்லுகின்ற நிலமானது எங்கு உயரமானது, எங்கு தட்டையானது, எது தாழ்வானது, எந்த இடம் மேடானது, சாய்வின் போக்கு எத்தகையது, பள்ளத்தாக்கின் தன்மை எப்படியானது போன்ற பல விடயங்களை இதன்மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். குறிப்பாக உன்னிச்சை, உறுகாமம் ஆகிய பிரதேசங்கள் 100 அடிக்கு மேல் அமைந்த ஒரு மேடு அதில்  அமையப்பெற்ற இயற்கையான குழியில் குளங்கள் அமைந்துள்ளதை படத்தில் காணலாம். இவ்விரு நீர் தேக்கங்களிலிருந்தும் வெளியேறும் நீர் அதன் பள்ளத்தாக்கின் ஊடாக வாவியையும், தாழ்நிலப் பிரதேசங்களையும் எந்தப்பாதையின் ஊடாக சென்றடைகின்றது என்பதை காணமுடியும். அந்தவகையில் உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டால் அது நேரடியாக வாவியில் விழுவதால் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு வரை நீரில் மூழ்கும் நிலையும், உறுகாமம் குளம் திறக்கப்பட்டால் அது நேரடியாக மாவடிவேம்பு, சித்தான்டி பகுதியிலேயே வந்து விழுகின்றது. இதனால் அப்பகுதி நீருள் மூழ்கடிக்கப்படுவதுடன் வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடிப் பிரதேசங்களையும் வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றது. இதனைவிட மாதுறு ஓயா, முந்தனையாறு (சந்தணமடு) பெருக்கெடுப்பதோடு வாழைச்சேனை வாவியை சித்தாண்டிப் பிரதேசத்திலும், கிரான் பிரதேசத்திலும் கலப்பதனால் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின்றன. 
மாவிலாறு வெள்ளச் சமவெளியில் இரு கிளைகளாகப் பிரியும் மகாவலி கங்கை வெருகலுக்கூடாகவும், கொட்டியாரக் குடாவுக்கூடாகவும் கடலை அடைகின்றது. இதில் வெருகலாறு பெருக்கெடுப்பதன் மூலம் கதிரவெளியில் இருந்து மாங்கேணி வரை வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது. அத்தோடு நவகிரி குளத்தில் இருந்து வெளியேறும் நீரும், அந்தெல ஓயா பெருக்கெடுத்து மட்டக்களப்பு வாவியை அடைவதன் காரணமாக மட்டக்களப்பின் தென்பகுதி நீரில் மூழ்கக் காரணமாகின்றது. பொதுவாகப் பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கே அமைந்த மேனிலப் பகுதி தவிர்ந்த 70 சத வீதமான நிலப்பரப்பு வெள்ள ஆபத்து மிக்க பகுதிகளாக மாறுகின்றது. 
இத்தகைய ஆபத்திலிருந்து மக்களை மீட்க இப்பிரதேசத்தில் அமைந்து காணப்படும் இயற்கையான சில உருவமைப்பு இம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் இயற்கை அரன்களாக வடிகால்களும், தோணாக்களும், வாவிகளும் காணப்படுகின்றன. அவற்றை முதலில் பாதுகாக்க முறையான திட்டத்தை வகுக்க வேண்டியது எதிர்கால சவால்களை சமாளிக்க உள்ள ஒரேஒரு வழியாகும். அவை இன்று அழிவடைந்து செல்லும் போக்குக் காணப்படுகின்றது. அவற்றை அழியவிட்டுவிட்டு அனர்த்த முகாமைத்துவம் பற்றி பேசுவது அர்த்தமற்றது. அனர்த்த முகாமைத்துவம் என்பதற்குள் நிவாரணப் பணிசெய்வதும், குறித்த தருணத்தில் நீருள் மூழ்கும் மக்களை மீட்டு இடைத்தங்கல் முகாமில் சேர்ப்பதும் என்பது அதில் ஒரு பகுதியே. ஆனால் நீண்டகால பாதுகாப்பும், அதற்கான முன்னாயத்தமும் வலுப்பெற்ற ஒரு சமுதாயத்தால் மட்டுமே தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனை உறுதிப்படுத்த மாவட்ட அளவிலான திட்டங்கள் வெற்றிடமாகவே உள்ளது. வெள்ளம் மட்டக்களப்பில் பல நூறு ஆண்டு வரலாற்றைக் கண்டு வருகின்றது. இன்றைய தொழில் நுட்பம், அறிவியல், ஆக்கத்திறன் மிக்க மனித வளம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அர்ப்பணிப்பும், மக்கள் நலனிலும், பிரதேச அபிவிருத்தியிலும் அக்கறைமிக்க எமது மாவட்டத்தின் அரசஅதிபரின் அனுசரணையில் வெள்ளத்தின் தாக்கத்தை மட்டக்களப்பில் மட்டுப்படுத்த முடியும் அதற்கான முயற்சிகளை முறைப்படி முன்னெடுப்பது அவசியமாகும்.


            கிருபா இராஜரெட்ணம்
விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

21 December 2014

வெள்ளத்தில் மூழ்கிய சித்தாண்டி  (Photos)

வெள்ளத்தில் மூழ்கிய சித்தாண்டி (Photos)

சித்தாண்டியின் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மற்றும் உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டமை போன்றவற்றினால்  தொடர்ச்சியாக வெள்ள நீர் அதிகரிக்கத் தொடங்கியது.   


சித்தாண்டி 04 இல் அடங்குகின்ற உதயனமூலை, மதுரங்காட்டு கொலனி ஆகிய பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சித்தாண்டி 04 கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்திற்கு முன்னாலுள்ள வளைவு வீதியில் சுமார் 7 அடி வரையிலான நீர் காணப்படுவதுடன், உதயன்மூலை பாலர் பாடசாலை முன்வீதியில் சுமார் 4 அடி வரையிலான நீரும், சித்தாண்டி 04 பழைய சந்தை வீதியில் 6 அடிவரையிலான நீரும் காணப்படுகின்றது. சில உள் குறுக்கு வீதிகள் 6 அடிக்கு மேற்பட்ட நீரைக்கொண்டும் காணப்படுகின்றன. 

சித்தாண்டி 03 மாரியம்மன் ஆலயத்தை அண்டிய பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு நீரினுடைய மட்டம் 6 அடிக்கு மேல் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தாண்டி 02, சித்தாண்டி 01 மற்றும் மாவடிவேம்பு ஆகிய கிராமங்களும் பகுதியளவில்  வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

சித்தாண்டி 04, 03 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பாடசாலை, பொதுச்சந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சில குடும்பங்கள் தத்தமது வீடுகளில் உள்ள மேல்தளங்களில் அல்லது பரண் அமைத்து தொடர்ந்தும் தமது உறைவிடங்களிலே தங்கியுள்ளனர். 

வீீடுகளிலே வளர்க்கப்பட்ட நாய்கள் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டவை தவிர  ஏணையவை உயிரிழக்கும் நிலையிலும், குளிரில் நடுங்கிய நிலையிலுமத் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் நாய்கள் உயரிழந்து மிதப்பதனையும் காணமுடிகின்றது. 

குறிப்பிட்ட பகுதிகளின்  மலசலகூடங்களின் கழிவு நீர் மற்றும் இன்னோரன்ன கழிவுகள் நீரில் கலந்திருப்பதனாலும், கிணறுகளை மேவி வெள்ள நீர் காணப்படுவதனாலும் தூயநீரைப் பெறுவதில் வெள்ளப்பிரதேசத்தில் தங்கியுள்ள குடும்பங்கள்  சிக்கலை எதிர்நோக்கியுள்ளதுடன், தொலைவிலிருந்து நீரை எடுத்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை கிராம உத்தியோகத்தர்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளனர்.