Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts

18 April 2017

1515 km தூரம் சைக்கிளில் சாதனை

1515 km தூரம் சைக்கிளில் சாதனை


வவுனியா மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் - பிரதாபன் எனும் சாதனைக் கலைஞன் இலங்கையைச் சுற்றி 1515 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் ஓடிக்கொண்டிருக்கின்றார். கடந்த 08.04.2017 அன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பயணமானது இன்றுடன் (18.04.2017) மீண்டும் வுவனியாவில் நிறைவுபெறவுள்ளது. 







"இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் ஓய்வூதியம்" எனும் கோரிக்கையை முன்வைத்து இந்த சைக்கிள் பயணத்தை அவர் ஆரம்பித்திருந்தார். 





இதற்கு முன்னர் கடந்த வருடம் மோட்டார் சைக்கிளில் இலங்கையைச் சுற்றி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 





























28 February 2015

சித்தாண்டி பாடசாலை வேம்பு மரத்திலிருந்து பால் வடிகின்றது.

சித்தாண்டி பாடசாலை வேம்பு மரத்திலிருந்து பால் வடிகின்றது.

(Akshayan) சித்தாண்டி சித்திவினாயகர் வித்தியாலய வளாக வேம்ப மரத்திலிருந்து நேற்றைய தினத்திலிருந்து பால்போன்ற ஒரு திரவம் வெளியேறிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு தெய்வீக நிகழ்வாக கிராம மக்கள் சிலரால் பார்க்கப்படுகின்றபோதும்,  இது ஓர் இயற்கை நிகழ்வேயாகும்.


தாவரங்கள் சூழலின் காலநிலைத்தன்மைக்கேற்ப வாழப்பழகிக்கொண்டவை என்று கூறலாம். வரண்ட பருவங்களில் அதிக ஆவியுயிப்பு இலைகளுக்கூடாக நிகழக்கூடாது என்பதற்காக தமது இலைகளை உதிர்த்து தாவரத்திலிருந்து மேலதிகமாக நீர் வெளியேறுவதனைக் கட்டுப்படுத்துவதனை இதற்கு சிறந்த ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

அந்தவைகயில் சில பிரதேசங்களில் வேப்பமரத்திலிருந்து வெள்ளையான திரவம் வெளியேறுகின்றபோது அதனைப் பால்வடிவதாகவூம்இ சமயநம்பிக்கையுடன் தொட்புடையதாகவும் எண்ணி சில இடங்களில் அதிசயப்படுகின்றனர். ஆனால் இந்த வேப்ப மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வெளிவருவதானது  இயல்பான ஒரு விடயம்தான். மாறாக அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பொதுவாக    Azadirachta indica    என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படுகின்ற வேம்பு (Neem Tree)  மரமானது  இந்தியாஇ இலங்கை பர்மா போனற அயன வலய நாடுகளில் வளHகின்ற ஒரு மருத்துவக்குணமுடைய ஒரு மரமாகும்.
வேப்பமரங்கள் ஸ்டோர்ச் எனப்படுகின்ற மாவூச்சத்தைக் கொண்டுள்ளது. இந்த மாவூச்சத்தினை வேப்பமரத்தினுடைய இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. இவ்வாறு சர்க்கரையாக மாற்றப்பட்ட திரவமானது பால்நிறத்தில் காணப்படுவதுடன்இ இனிப்பச் சுவையுடையதாகவும் காணப்படும். இந்தத்திரவமானது வேப்பமரத்தின் பட்டையின் அடியிலுள்ள புளோயம் என்ற திசுப்பகுதியில் சேமிக்கப்படுகின்றது.

இவ்வாறு வேம்பு மரத்தின் பட்டையின் அடிப்பகுதிகளில் சேமிக்கப்பட்டிருக்கின்ற பால்நிறத்திலான திரவமானது  வேப்பம் பட்டைக்கூடாக வெளியேறும்போதே பால் என அழைக்கப்படுகின்றது. வேம்பு மரம் மட்டுமல்ல தாவரங்கள் வேரினுடாக நீர் மற்றும் போசனைகளை உறிஞ்சி ஓர் நுண்ணிய சுற்றுவட்டத்தினை தங்களுடைய பகுதிகளுக்குள்ளே நிகழ்த்துகின்றன. வேர்களுடாக நீரை உறிஞ்சுவதன் மூலம் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நீரூம் மற்றும் போசனைகளும் கடத்தப்படுகின்றன.

அதிக மழை நிகழும் காலங்களில் இவ்வாறு வேப்ப மரத்தினால் அதிகளவில் நீர் உறிஞ்சப்படுகின்றது. இதனால் சிலவேளைகளில் வேப்பமரத்தின் திரவத்தின் தேவையை அல்லது தாங்குதிறனை விட அதிகிhpக்கின்றபோது அந்த நீருடன் சேர்ந்த திரவங்கள் மரத்திலிருந்து ஏதாவது ஓர் பகுதியினால் வெளியேற முற்படுகின்றன. இந்தவேளையில் வேப்பமரத்தின் பட்டையின் அடியிலுள்ள  திசு வெடிப்படைந்து அதனுடாக அந்த மேலதிக திரவம் வெளியேறுகின்றது.

இவ்வாறு வெளியேறுகின்ற திரவம் பாலின் நிறத்திலும்.  இனிப்புச் சுவையுடையதாகவும் இருக்கின்றபோது அதனை பால் வடிதல் என பிரதேச மக்கள் அழைக்கின்றனர். பின்னர் மேலதிக திரவம் வெளியேறி முடிவடைந்த பின்னர் ஓரிரு நாட்களில் பட்டையில் உள்ள பிளவுகளினுடாக பால் கசிதல் நின்றுவிடுகின்றது. எல்லா வேம்பு மரங்களிலும் ஒரே காலப்பகுதியில் பால்வடிதல் நிகழ்வதில்லை. அது தாவரத்தின் வேரின் பரம்பல், ஆழம், உறிஞ்சுகின்ற நீரின் அளவு,   ஆவியுயிர்ப்பு அளவு மற்றும் உணவுத்தயாரிப்பின் அளவு ஆகியவற்றில் தங்கியிருப்பதனாலேயே ஒரு சில மரங்களில் வடிகின்றது.

எமது பிரதேசத்தில் நிகழ்ந்த வேப்பமரத்திலிருந்து பால்வடிவதற்குரிய காரணமும் மேற்கூறியதைப் போன்றதேயாகும். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தொட்ர்ச்சியாக கிடைத்து வந்த மழையின் காரணமாக அதிக நீரை வேப்பமுரம் உறிஞ்சியிருந்தது. இந்த மேலதிக திரவம் மாப்பொருளுடன் கலந்தே இந்தப் பால் வடிதல் நிகழ்வு இடம்பெற்றது. 
  (Photos by Thayabaran & Thasankan)





30 September 2014

பாசிக்குடா கடற்பரப்பில் நீராவிக்கப்பல்

பாசிக்குடா கடற்பரப்பில் நீராவிக்கப்பல்

பாசிக்குடா கடற்பரப்பில் மூழ்கியிருந்த நீராவி கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காலி சமுத்திர தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஆராய்ச்சிகளின்போது இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரும் பாசிகுடா கடற்பரப்பிலிருந்து மூன்று கப்பல்களின் சிதைவுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த அனைத்து கப்பல்களும் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என அனுமானிக்கப்படுவதாக தொல்பொருள் நிபுணர் ரசிக்க முத்துகுமாரன தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் அநேகமான பாகங்கள் உடைந்துள்ளதால் அவை எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த முடியாமற்போயுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

18 August 2014

எலிப்பொறியை ஏமாற்றிய எலி - வினோதம்

எலிப்பொறியை ஏமாற்றிய எலி - வினோதம்

எலிப்பொறியை வைத்தவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி தனது உணவை உண்டுவிட்டு வெளியேறும்  திறமைசாலியான எலியின் நடவடிக்கையை பாருங்கள்.





















12 August 2014

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவி;ல் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது எதனுடைய வெளிச்சம் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த வெளிச்சம் தொடர்பில் பலரும் தமக்கு அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை முதல் சேருவில வரையில் உள்ள மக்கள் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

27 July 2014

சித்தர்கள் வகுத்த வர்மக்கலை

சித்தர்கள் வகுத்த வர்மக்கலை

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழு
மையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.


இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் "அக்கு பஞ்சர்" போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும். ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.


தலைப்பகுதி வர்மங்கள் (37)
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்மம்

29 June 2014

பெருமாவெளி குளத்தினுள் அழகிய பறவைகள்

பெருமாவெளி குளத்தினுள் அழகிய பறவைகள்

மனிதனின் நடமாட்டம் குறைந்த பகுதிகள் மனதிற்கு இதமான காட்சிகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் சித்தாண்டி பெருமாவெளி குழத்தினுள் அழகிய பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.  நீர் வற்றுக் காலம் ஆகையால் குழத்தினுள் உள்ள மீன் போன்ற உணவுகளை பிடித்து உண்பதற்காக இவை வேறிடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றன.





24 May 2014

ரஜனி - மோடி இணைந்து நடித்த பாடல்

ரஜனி - மோடி இணைந்து நடித்த பாடல்

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தும், இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியும் சேர்ந்து நடித்த கார்ட்டுன் பாடலை இங்கே காணலாம்.





04 February 2014

காடுகளில் வாழும் காட்டுக்கோழி

காடுகளில் வாழும் காட்டுக்கோழி

காடுகளில் வாழும் ஒருவகை கோழி இனமே காட்டுக் கோழி ஆகும். மட்டக்களப்பின் காட்டுப்பகுதிகளிலும்  இவ்வகைக் கோழி இனம் வாழ்கின்றது.  நகரப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இந்தக் கோழி பற்றி அறிந்திருப்பது குறைவு. 
இந்தக் கோழி இனம் சாதாரண கோழி இனத்திலிருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. வால்கள் நீளமானதாகவும், காலில் உள்ள அபாய முள்ளு நீளமானதாகவும் இருப்பதுடன், இது மரத்திற்கு மரம் தாவிப் பறக்கக்கூடியதுமாகவும், மரத்திலே தங்கி வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றது.