Showing posts with label முறக்கொட்டான் சேனை. Show all posts
Showing posts with label முறக்கொட்டான் சேனை. Show all posts

28 May 2015

முறக்கொட்டான் சேனை இ.கி.மி. வித்தியாலய பழைய மாணவர்களுக்கான கூட்டம்

முறக்கொட்டான் சேனை இ.கி.மி. வித்தியாலய பழைய மாணவர்களுக்கான கூட்டம்

(Akshayan) முறக்கொட்டாச்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் பழய மாணவர்களின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 30/05/2015 (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளதால், அனைத்து பழைய மாணவர்களையும் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்திற்கு வருகை தரும்படி கூட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கினறனர்.

07 August 2014

முறக்கொட்டாஞ்சேனை தேவாலய வீதி நிர்மானிப்பு பணி ஆரம்பம்

முறக்கொட்டாஞ்சேனை தேவாலய வீதி நிர்மானிப்பு பணி ஆரம்பம்

கோறளைப்பற்று தெற்கு பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் பணிப்பின் பேரில் முறக்கொட்டாஞ்சேனை மக்களின் வேண்டுகோளிற்கு அமையவும் இம்மக்களின் முக்கிய போக்குவரத்து பாதையாகக் காணப்பட்ட தேவாலய வீதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப வேலைகள் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆ.தேவராஜ், ஜனாதிபதி ஆலோசகரின் இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீன்; மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முறக்கொட்டாஞ்சேனை ஆலய முன்றலில் கிராம வாசிகளுடன் கலந்துரையாடினர்.


 
 

06 July 2014

முறக்கொட்டான் சேனை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

முறக்கொட்டான் சேனை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்லும் ஆண்டு 9 மற்றும் 10 பயிலும் 14 மாணவர்கள் மாணவி ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த தனியார் வகுப்பு நிலையத்தின் ஆசிரியர் தலைமையில் பெற்றோரும் இணைந்ததாக இந்த சுற்றுலாவினை மேற்கொண்டுள்ளனர்.  
நீர்நிலைக்கு அருகில் குறித்த மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது மட்டியெடுக்கவென இரு மாணவர்கள் நீரில் இறங்கியுள்ளபோது அந்த மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த ஏனைய நான்கு மாணவர்கள் அவர்களை காப்பாற்ற நீரில் பாய்ந்துள்ளனர்.இந்த நிலையில் அவர்களும் மூழ்குவதை கவனித்த ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைவாக செயற்பட்டு காப்பாற்றச்சென்ற நான்கு பேரையும் காப்பாற்றியபோதிலும் முன்னதாக மூழ்கிய இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
இதன்போது தரம் 10இல் கல்வி பயிலும் செல்லத்தம்பி செல்வராணி மற்றும் தரம் 9பயிலும் சாந்தன் பிரவின்(14வயது)ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இதன்போது நீரிழ் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

20 April 2014

புதுவருட விளையாட்டு நிகழ்வு

புதுவருட விளையாட்டு நிகழ்வு

(Sanjee)சித்திரை புதுவருடப்பிறப்பு கலாச்சார விளையாட்டு விழா இன்று காலை 7.30மணியலவில் முறக்கொட்டான் சேனை ஆற்றத்தரை அருகில முறக்கொட்டான் சேனை இளம் சுடர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்  இடம் பெற்றது.



இக் கரப்பந்தாட்ட போட்டியானது கிரான் விளையாட்டு கழகத்திற்கும் முறக்கொட்டான் சேனை இளம் சுடர் விளையாட்டு கழகத்திற்கும் இடையிவல் இடம் பெற்றது. இதில் முறக்கொட்டான் சேனை இளம் சுடர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.