Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts

04 August 2014

பிறந்த எண்ணுக்கான பலன்கள்

பிறந்த எண்ணுக்கான பலன்கள்

நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண்1. ஒன்றாம் எண்என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒருமாணவர்முதல்இடம்பெறுகிறார் என்றால் அவர்மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்தஎண்ணுக்கு அதிபதிசூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரைவேலைவாங்குவதில் திறமை, மனிதநேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாததன்மைபோன்றஎத்தனையோ அனுகூலங்கள்.

தன்துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடினஉழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்தஆலோசனை, துன்பங்களைக் கண்டுதுவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத்தெரிவுபோன்றகுணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர்மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.
நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாகவிளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரதுஎதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்ககுணம்உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல்பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர்சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்கமாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம்கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்குஉண்டு. கண், வயிறு, தலைசம்பந்தமான சிறியஉபாதைகள் ஏற்படும்.
மொத்தத்தில், புகழ்விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.
முதலாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மைதரும்எழுத்துக்கள்
: A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
நன்மைதரும்எண்கள்
: 1,3,4,5,9
நிறம்
:
இளம்சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
ரத்தினம்
:
மாணிக்கம்
ஹோரை
:
சந்திரன், குரு, புதன்
திசை
:
கிழக்கு, வடகிழக்கு
தொழில்
:
அரசுவேலை, அரசியல், மருத்துவம், கமிஷன்தொழில்
முதலாம் எண்ணில் பிறந்தபிரபலங்கள
எண்கணிதத்தின் தந்தைகீரோ
: 01.01.1870
சத்ரபதி சிவாஜி
: 10.04.1627
விமானகண்டுபிடிப்பாளர் ஆர்வில் ரைட்
: 19.08.1905
நீராவிஇயந்திரத்தைத் தந்; ஜேம்ஸ் வாட்
: 19.01.1736
லெனின்
: 10.04.1870
நடிகர்என்.டி.ராமராவ்
: 28.05.1922
பில்கிளிண்டன்
: 19.08.1946
மைக்கேல் ஜாக்சன்
: 01.09.1959
இளவரசிடயானா
: 01.07.1961
தியாகராஜ பாகவதர்
: 19.05.1890
ஜெயப்பிரகாஷ் நாராயண்
: 10.10.1902
நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?
2,11,20,29 தேதிகளில் பிறந்தஇவர்களது எண்ணான2 இன்அதிபதிசந்திரன்.
இவர்களின் இயல்புஎப்படிஇருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்துபூட்டைஇழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேககுணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர்இருப்பார். மனம்போனபோக்கிலே வாழ்ந்தால் என்னஎனஎண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரையும்அன்புஎனும்ஆயுதத்தால் அடக்கிவிடுவர்.
உலகம்உருண்டை என்றுயாராவது சொன்னால், ஆமாம்அதுஉண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்குமேல்என்னஉள்ளது, வெற்றிடமாக இருந்தால் அதுஎவ்வளவு தூரம்உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனைவளம்மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக்காரியத்தைச் செய்தார்கள்? எனபிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்துவிடுவர். கற்பனையில் கோட்டைகட்டிஒருஅரசாங்கமே நடத்திடுவர்.
இரவுஎவ்வளவு நேரமானாலும் சரி. சொந்தவீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிகஅதிகம். கண்கள்காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்றுபலருக்கும் எட்டாதசமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறைநாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரைநம்பிஎந்தவேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒருபுள்ளிகிடைத்தால் போதும். ஒருபெரியகோலமேபோட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்தஎண்ணில் பிறந்தநிறையகலைஞர்களை உலகத்திரையுலகில் காணலாம்.
பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரியதிட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம்தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டுவைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும்புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூடமத்திமவயதில்தேசப்புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்திதிரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும்பொருள்ஈட்டுவர்.
அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலிபோன்றநீர்சம்பந்தமான நண்பர்கள் வந்துசெல்வர். அடுத்தவர் மனதைஅறிவதில் சமர்த்தர்கள். நல்லதுணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம்படிப்படியாக வந்துசேரும்.
இவர்களுக்கு எதிரிகளே இல்லைஎனலாம். 9ஆம்எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பானஎதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்டஇவர்களுக்கு யாரேனும் ஒருவர்தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்துவிடுவர்.
2 ஆம்எண்ணுக்கு உகந்தவை
நன்மைதரும்எழுத்துக்கள்
: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W
நன்மைதரும்எண்கள்
: 2,7,1,6
நன்மைதரும்தேதி
: 27,11,16,20,25,29
நன்மைதரும்நிறம்
:
வெள்ளை, சந்தனம்
நன்மைதரும்ரத்தினம்
:
முத்து
நன்மைதரும்ஹோரை
:
சந்திரன், குரு, சுக்கிரன்
நன்மைதரும்திசை
:
வடகிழக்கு
நன்மைதரும்தொழில்
:
நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை
2ம் எண்ணில் பிறந்தபிரபலங்கள்
மகாத்மா காந்தி
: 02.10.1969
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா
: 02.10.1908
தாமஸ்ஆல்வாஎடிசன்
: 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே
: 02.05.1921
ராஜிவ்காந்தி
: 20.08.1994
லால்பகதூர் சாஸ்திரி
: 02.10.1904
மகாகவிபாரதியார்
: 11.09.1882
காஞ்சிப் பெரியவர்
: 20.05.1894
பாடகிகே.பி சுந்தரம்பாள்
: 11.10.1908
நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?
3,12,21,30 தேதிகளில் பிறந்தஇவர்களது எண்ணான3 எண்காரர்களின் இயல்புஎப்படியிருக்கும் என்பதுபற்றிக் காண்போம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாதஇவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர். இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனைவழங்குவதில் ஆதவன். பலஇடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறுவயதிலிருந்தே பலசெயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்துபெயர்பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கிநண்பர்களாகி விடுவர். சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன்சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம்எண்பேர்வழிகள் போதிக்கும் கலைதெரியாமலேயே பலரைக்கவர்ந்திழுக்கும் பலேகில்லாடிகளாக இருப்பர்.
மதிநுட்பத்தால் மாட்சிமை பெறும்இவர்களுக்கு உடல்உழைப்பு என்பதுஏற்றுக்கொள்ள இயலாதஒன்று. இவர்களைப் போன்றேஇவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பலஉணவுவகைகள்அலர்ஜிஎன்றசமாச்சாரத்தை இழுத்துக்கொண்டு வந்துவிடும். உணவுக்கட்டுப்பாடு அவசியம். எவர்பணமாவது இவர்கள் கையில்இருந்துகொண்டே இருக்கும். பொன்ஆபரணங்களை அதிகம்விரும்புவர். மதநம்பிக்கை அதிகம். தன்சமாச்சாரங்களை பிறரிடம் சொல்லமாட்டார்கள். பொதுக்காரியங்களை நிறையஎடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும்கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள்ஆடைஅதிகம்பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்கவிரும்புவர். பிறர்துன்பங்களை தன்னுடையது போலநினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போலபார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழுபிரம்மச்சாரிபோல் ஆச்சாரபுருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம்அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழிதரும்.
3ஆம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மைதரும்முதல்எழுத்துக்கள்
: C,G,L,S,A,I,J,Q,Y
நன்மைதரும்தேதிகள்
: 1,3,9,10,12,18,19,21,27,28,30
நன்மைதரும்கிழமை
:
வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மைதரும்நிறம்
:
மஞ்சள், இளம்சிவப்பு
நன்மைதரும்ஹோரை
:
குரு
நன்மைதரும்திசை
:
கிழக்கு
நன்மைதரும்தொழில்
:
கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,
அரசியல், ராணுவம், வங்கி.
3ஆம் எண்ணில் பிறந்தபிரபலங்கள்:
ஜெகதீஷ் சந்திரபோஸ்
: 30.11.1863
சர்.சி.வி.ராமன்
: 12.01.1879
சுவாமிவிவேகானந்தர்
: 12.1.1863
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
: 3.3.1847
வீரபாண்டிய கட்டபொம்மன்
: 3.1.1760
பகவான்ரமணர்
: 30.12.1879
ஞானிசுத்தானந்தபாரதி
: 12.5.1897
ஹென்றிபோர்டு(போர்டுகார்அதிபர்)
: 12.12.1950
திப்புசுல்தான்
: 21.11.1750
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
: 30.10.1908
நீங்கள் 4 ஆம்எண்ணில் பிறந்தவர்களா?
4,13,22,31 ஆகியதேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.
மனதில்தோன்றியதை அப்படியே வெளியேசொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்தரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச்சொல்லிவிடுவார்கள். தனதுகருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிடசாஸ்திரம், மதசம்பிரதாயங்கள் குறித்து தங்கள்கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
சுற்றித் திரிவதில் சுகம்காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்றுநிறுவனவளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சிலநேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனைஆகியவைமிரட்டுவது போல்இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்தநிறுவனத்தில் வேலைசெய்தாலும் நிறுவனத் தலைவரேஇவர்தானோ என்றுநினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின்புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர்இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்விஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிகமுக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும்வேகத்தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்துஎப்படியும் வென்றுவிடுவார்கள்.
ஒருஇடத்தில் ஒருமணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்கவைப்பவர்களுக்கு; ஆயிரம்ரூபாய்பரிசுதருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சைநிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்கஇவர்கள் பிறர்எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியானஇவர்கள் அரசாங்கத்திற்கே சிலசமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லிஅசத்திவிடுவார்கள்.
பேசும்போது குரலைஏற்றி, இறக்கிகையைஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம்தனக்கென ஒருரசிகர்கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன்கருத்துக்களை சபையில் ஏற்றும் வரைசளைக்கமாட்டார்கள். உலகம்உருண்டைதான் என்றுசொன்னால் இல்லைஅதுசதுரவடிவம்உடையதுஎனவிதண்டாவாதமும் பேசுவார்கள். தான்சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்றமுயற்சிப்பார்கள். இந்தவிதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன்கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்கஇயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சிலஅருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரிசொல்லிவிடுவார்கள். இதைக்கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதைசெயலுக்குக் கொண்டுவந்துபணம்சம்பாதித்து விடுவார்.
4ஆம் எண்ணில் பிறந்தபிரபலங்கள்:
ராமானுஜர்
: 04.04.1917
கணிதமேதை ராமானுஜம்
: 22.12.1887
திருப்பூர் குமரன்
: 04.10.1904
சர்தார் வல்லபாய் படேல்
: 31.10.1875
தாதாபாய் நௌரோஜி
: 04.09.1825
ராஜாராம் மோகன்ராய்
: 22.05.1772
ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?
5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிகஉழைப்பு மனிதநேயம், எதையும் சாதிக்கும் வல்லமைகொண்டஇவர்கள் கலைநயமிக்கவர்கள். எதிலும் ஒருவேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேகசெயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்துவரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\’ என்றுவசைபாடவர். இவர்களின் மூளைசாட்டிலைட்டிலிருந்து சக்திபெற்றது போல்செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவதுஒன்றைகண்டுபிடித்த வண்ணமிருப்பர்.
பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரிபக்கத்திலிருப்பவர் இவரதுவிசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சிலகாரியங்களைக் கூடசாதித்து விடுவேன் என்றுகுழந்தை போல்சவால்விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம்அடுத்தவரால் செய்யமுடியாத காரியங்களை செய்துகெயர்பெறவேண்டும் எனவிரும்புவர். இவர்களின் இந்தபோக்கினால் தான்உலகில்பலகண்டுபிடிப்புகளை நாம்அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள்வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூடஅப்படித்தான்.
ஒரேஇடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம்விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடைகுணத்தை தெரிந்து கொண்டுஅதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்யதயாராகஇருப்பர். மனதைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்விஏற்படுவதை வெகுசீக்கிரம் மறந்துஅடுத்தகாரியத்திற்கு தயாராகி விடுவர்.
ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகுஇல்லை. பூமியில் இந்த5ஆம்எண்காரர்கள் இல்லையேல் பலசுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர்முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக்கருத்தையும் உடனேவெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றிஎதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஐந்தாமஎண்குழந்தைகளை சிறுபிராயத்திலிருந்தே நல்லகுணமுள்ள நண்பர்களுடன் பழகச்செய்யவேண்டும். எதையும் வெகுசீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதைகிரகிக்க நல்லநண்பர்கள் வேண்டுமல்லவா?பெரும்பாலும் காதல்திருமணத்தையே விரும்புவர், எனவேநன்குஆலோசித்து துணையைதேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள்நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்தகல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவைபாதியாக குறைத்து விடுவர்.
சகலவிஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல்தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்\’ ஜாம்பவான்களாக இருப்பர்.
5 ஆம்எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்
வள்ளலார் – 05.10.1823ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) – 05.05.1759.. சிதம்பரம் பிள்ளை– 05.09.1872ஜவகர்லால் நேரு– 14.11. 1889டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) – 14.11.1889அம்பேத்கர் – 14.04.1891சுபாஷ் சந்திரபோஸ் – 23.01.1897திலகர் – 23.07.1856வில்லியம் ஷேக்ஸ்யிர் – 24.04.1564
நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?
6,15,24
தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்பரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்லபண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகுசாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்குபெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்துஆடை, ஆபரணத்துறையில் பெரும்பெயர்பெறுவர்.
எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகஅதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல்மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.
எதற்கும் அஞ்சாதஇவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன்முகத்தைப் பார்த்து, இதைவிடஅழகாகஇருந்திருக்கலாமோ என்றுவருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடுஅழகுச்சாதனங்களை எடுத்துச் சென்றுகாரிலிருந்து இறங்குமுன் ஒப்பனைபோட்டுக்கொண்டு தன்னைஅழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிகஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்லமாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பேகாரியங்களில் இறங்குவர்.
இவர்கள் பூலோகவாழ்வேசிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டுஎன்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வைநன்குஅனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வேமாயம்என்பர். 6ஆம்எண்ணினரோ வாழ்வேயோகம்என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரிஎன்றுசொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்றுபிடிவாதமாக இருப்பர். இதனால்இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்லயாராவது வந்தால் சிரித்துக் கொண்டேகேட்டுக்கொள்வர். ஆனால்இவர்கள் என்னநினைத்தார்களோ, அதைநடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு எனஇவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளைஉடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமைஉண்டு. பிறர்செய்தஉதவிகளை மனதில்வைத்துஅவர்களுக்கும் நன்மைசெய்யவேண்டும் என்றஎண்ணம்இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்படநேரிடலாம். உலகம்அமைதியுடன் இருக்கவேண்டும் எனநினைக்கும் இவர்கள் பிறர்துன்பம் தாங்கமாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவேகவனம்தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியானஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வுமுழுக்க பலமனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்தநல்லகாரியமும் செய்யநினைக்கும்போது 3ஆம்எண்சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
6ஆம் எண்ணில் பிறந்தபிரபலங்கள்
மகான்அரவிந்தர்
: 15.08.1872
அண்ணாத்துரை
: 15.09.1909
காமராஜர்
: 15.07.1903
ஜெயலலிதா
: 24.02.1948
ஆறாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மைசெய்யும் எழுத்து
:U,V,W,R,K,B
நன்மைசெய்யும் தேதி
:2,6,9,11,15,18,20,24,27,29
நன்மைசெய்யும் கிழமை
:
வெள்ளி, திங்கள், செவ்வாய்
நன்மைசெய்யும் நிறம்
:
வெள்ளை, இளம்ரோஸ்
நன்மைசெய்யும் திசை
:
மேற்கு
நன்மைசெய்யும் தொழில்
:
பெண்கள் விரும்பும் தொழில்கள், சினிமா, புடைவை,
எழுதுகருவி, நகைக்கடை, வீடுவிற்பது,
நீங்கள் 7ஆம்எண்ணில் பிறந்தவர்களா?
7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வஞானமும் கல்வியும் நளினமும் நாவில்நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம்போன்றதெய்வீகத் தன்மையும் கூடவேகுழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம்எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனைகேட்டுப் பிரபலமாகலாம் என்பதுஇவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.
வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்டஇவர்கள், காதல்வலையில் மிகவேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக்குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.
புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவதுஒருபுகையிரதம் தாமதம்என்றாலும் அதுகவிழ்ந்திருக்குமோ, ஏதாவதுபிரச்சினையோ என்றுகுழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும்துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்தஅழுத்தநோய்க்கு மிகஇலகுவாக ஆட்படுவர்.
பலநேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச்சாதாரணமாகப் பெற்றுவிடுவர். அதேநேரம், வெற்றிதேடிவரும் என்றஅதீதநம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில்அதிகப்பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம்ஞானநிலையைத் தேடிஅலையும்.
நல்லநேரத்தில் பிறந்தஇந்தஎண்ணினர், தமது25ஆம்வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள்வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரைஎளிதில் கவர்வர்.
அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடையஇவர்கள், சுதந்திரமாக இருக்கவிரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம்மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக்கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீகஈடுபாடும் கொண்டதர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.
ஏழாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மைதரும்எழுத்துக்கள்
: O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W
நன்மைதரும்திகதிகள்
: 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29
நன்மைதரும்கிழமைகள்
:
ஞாயிறு, திங்கள், வெள்ளி
நன்மைதரும்நிறங்கள்
:
வெள்ளை, இளஞ்சிவப்பு
நன்மைதரும்திசைகள்
:
கிழக்கு, மேற்கு
நன்மைதரும்தொழில்கள்
:
இலத்திரனியல், பூஜைப்பொருட்கள், ஏற்றுமதி,
சினிமா, அரசியல், ஆன்மிகம், சேவைநிறுவனம்,
கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை,
நீதித்துறை, மருத்துவம்
7ஆம் எண்ணில் பிறந்தபிரபலங்கள்:
இயேசுநாதர்
:
டிசம்பர் 25
கிருபானந்த வாரியார்
: 25.08.1906
எம்.எஸ்.சுப்புலட்சுமி
: 16.09.1916
வாஜ்பாய்
: 25.12.1924
சார்லிசாப்ளின்
: 16.04.1889
நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சமுதாயம் எட்டுஎன்றாலே ஒதுங்குகிறது என்றுஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!
இந்தஎண்ணில் பிறந்தஎம்.ஜி.ஆர். பாரதரத்னாவிருதுபெற்றவர் என்பதைநினைவில் கொள்ளுங்கள். தன்சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றிசொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவேபலபிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால்நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ எனநினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழையமுடியாததால், பச்சையம் பெறமுடியாத இலைபோலவும், தாமரைஇலைத்தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்தஎண்ணினர் நியூமராலஜியில் அதிகநாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சிலஅறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்றுவிடுவார்கள். அதுமட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒருதீர்வைப் பெற்றுவாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர். எனவே, உங்களுக்கு கவலையேவேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்றுஎச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறியநோய்என்றாலும் உரியசிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும்மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடிஅடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்தஇலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.
8ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனைகேட்காதீர்கள். சுயமாகசிந்தித்து முன்னேறும் வலிமைஉங்களிடம் உள்ளது.
எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை
நன்மைதரும்எழுத்து
: E,H,N,X
நன்மைதரும்தேதி
: 5,14,23
நன்மைதரும்கிழமை
:
புதன், சனி
நன்மைதரும்நிறம்
:
சாம்பல், பச்சை
நன்மைதரும்திசை
:
வடக்கு
நன்மைதரும்தொழில்
:
எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்
எட்டில் பிறந்தபிரபலங்கள்
.வெ.ராமசாமி
: 17.9.1879
எம்.ஜி.ஆர்.
: 17.1.1917
எலிசபெத் டெய்லர்
: 17.1.1901
குருநானக்
: 8.11.1470
ஜார்ஜ்பெர்னாட்ஷா
: 26.7.1856
நீங்கள் 9 எண்ணில் பிறந்தவர்களா?
9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டுஒன்றுதுண்டுஇரண்டுஎன்றகொள்கைகொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமானமுடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படிஇந்தவல்லமைவந்ததுஎனநினைக்கத் தோன்றும்.
இதற்குஒருகாரணம்உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம்செவ்வாய். இதற்குமுழுமையான ஆற்றலைஅனலாகத் தருபவர் சூரியன். 9ஆம்எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால்அறிவில் சூரியன் போன்றுபிரகாசிப்பர்.
கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சிலநேரங்களில் மிகக்கடுமையாக இருந்தும் வேலையைமுடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணிநேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடுதிரும்பும் முன்இவர்கள் வீடுதிரும்பிவிடுவர். கூலிவேலைக்குப் போனால்கூடஅங்கேசங்கம்அமைத்துத் தலைவரான பிறகேதன்வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்கஒருஎண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்தமனைவிஅமைந்தால், மனைவிசொல்லேமந்திரம் என்பதற்கு ஒப்பபெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.
அதீதசுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்டஇவர்களை உணவுவகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிசஉணவுமிகவும் பிடிக்கும். ஆனால்உணவுக்கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ணநோயினால் பாதிப்பு வரலாம்.
நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்கவேண்டும் என்றுஅடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.
மிடுக்கான தோற்றம் கொண்டஇவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம்செலுத்தும்போது கவனம்தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்டஇவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக்கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.
அடுத்தவர் மெச்சும்படி வாழும்இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனைகேட்குமளவிற்குப் பலஇடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.
எந்தப்பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பலநாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன்சுதந்திரத்திற்குப் பங்கம்ஏற்பட்டால் ஒருபெரும்பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்தஓட்டத்தில் ஏற்றஇறக்கமுpள்ளஇவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்புஎப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்டஇவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையேதன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.
ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மைதரும்முதல்எழுத்து
: C,G,L,S,U,V,W,A,J,Q,Y
நன்மைதரும்தேதி
: 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30
நன்மைதரும்கிழமை
:
வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மைதரும்நிறம்
:
சிவப்பு, மஞ்சள்
நன்மைதரும்திசை
:
தெற்கு, வடகிழக்கு
நன்மைதரும்தொழில்
:
நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,
விவசாயம், கமிஷன், கடல்கடந்தவியாபாரம்,
பூஜைபொருட்கள், கார்விற்பனை,
ரியல்எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்