Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

27 October 2023

 பித்தப்பை கல்

பித்தப்பை கல்


பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

06 January 2021

சளி உடனே வெளியேறவேண்டுமா? இதனைச் செய்யுங்கள்

சளி உடனே வெளியேறவேண்டுமா? இதனைச் செய்யுங்கள்


பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.


மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.





கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.


ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.


நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.


பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. (நன்றி - தமிழ் மருத்துவம்)
















09 January 2017

ஆஸ்துமாவிற்கான வீட்டு மருத்துவங்கள்

ஆஸ்துமாவிற்கான வீட்டு மருத்துவங்கள்


நுரையீரல் மூச்சுக் குழாயில் ஏற்படும் சுருக்கம் அல்லது அழுத்தத்தினால் சுவாசித்தலில் தடையை ஏற்படுத்தும் பிரச்சினை ஆஸ்த்துமா அல்லது இழுப்பு என அழைக்கப்படுகின்றது. ஆஸ்துமா தொடர்பாக இங்கு நாம் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த வீட்டு மருத்துவங்களை பார்க்கவிருக்கின்றோம்.












ஆஸ்த்துமாவின் அறிகுறிகள்


  1. இருமல்

  2. நாசியழற்சி

  3. மூச்சுத்திணறல்

  4. மார்பு இறுக்கம்

  5. மூச்சு திணறல்

  6. களைப்பு

  7. அதிகரித்த சுவாச விகிதம்

  8. அதிகரித்த நாடித்துடிப்பு

  9. வியர்வை














ஆஸ்மதுமா நோய் ஏற்படுவதற்கான காரணிகளும், தூண்டுதல்களும்.










  1. மன அழுத்தம்

  2. கோபம்

  3. ஒவ்வாமை வெளிப்பாடு

  4. உணவுகள்

  5. சுவாச நோய் தொற்று

  6. மருந்துகள்

  7. சுற்றுச்சூழல் மாசுபாடு

  8. புகை

  9. குளிர் வெளிப்பாடு

  10. உடற்பயிற்சி

  11. இரசாயனத் தீப்பொறிகள்

  12. தூசி












ஆஸ்துமா நோய்க்கு இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்









  1. திப்பிலி மற்றும் விளாம்பழம் ஆகியவற்றைச் சிறிது நீருடன் கலந்து கொதிக்க வைத்து அதனை உள்ளெடுத்துக் கொள்வதன் மூலம் உடனடியான மூச்சுவிடுவதில் ஏற்படும் பிரச்சினையை நீக்கிக்கொள்ளலாம்.

  2. ஒரு கப் அளவு வெந்தயத்துடன், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து  கசாயமாக வைத்து அருந்துவதனால், சிறந்ததொரு சுவாசச் சளி நீக்க மருந்தாகச் செயற்படுகின்றது.

  3. ஒரு அங்குலம் அளவிலான இஞ்சியினைத் துண்டுகளாக்கி அதனை தண்ணீரில் நன்றாகச் சுடவைத்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் நுரையீரல் சுவாசக் குழாயின் வீக்கத்தைக் குறைத்து சீரான சுவாசத்திற்கு உதவுகின்றது.

  4. ஒரு கிளாஸ் தன்னீருடன், 10 வெள்ளைப்பூண்டுத் துண்டங்களையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அதனை ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்து வந்தால் நுரையீரல் நெருக்குதலை நீக்குகின்றது.

  5. தேசிக்காய் பாணத்தினை தினமும் அருந்தி வருகின்றபோதும் ஆஸ்த்துமாவினைக் கட்டுப்படுத்துகின்றது. தேசிக்காயிலுள்ள விட்டவின் சி மற்றும் ஆண்டிஒக்சினேற்றுகளும் இதற்கு காரணமாகும்.

  6. தூதுவளை இலையைக் காயவைத்து தூளாக்கி அதனை தேனுடன் கலந்து சாயப்பிட்டால் , ஆஸ்த்துமாவைக் குணப்படுத்தக்கூடிய சிறந்த ஒரு மருந்தாகும்.

  7. துளசி இலையைத்  தேனுடன் கலந்து சாயப்பிடுவதனாலும் ஆஸ்துமா நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.  

  8. ஆஸ்த்துமா வேளையின்போது கோப்பியினை அருந்துவதன் மூலமும், கோப்பியிலுள்ள கோஃபின் எனும் பொருளானது சுவாசப்பை இளக்கியாகும். இதனால் சுவாசத்திற்கான வழிகள் திறந்து இலகுவான சுவாசத்திற்கு வழிவகுக்கின்றது.

  9. வெற்றிலைச் சாறினை மிளகுடன் கலந்து நித்திரைக்குச் செல்லுமுன்னர் அருந்துவதன் மூலம் ஆஸ்த்துமா காரணமாக ஏற்படும் சுவாசத்தடை அல்லது மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம்.

  10. மஞ்சள் கட்டியினை அரைத்து அதனை பாலுடன் கலந்து குடிப்பதன் மூலமும் சுவாசத்தினை இலகுவாக்கின்றது.

































































இணையத்திலிருந்து தேடிப் பெற்று இத்தகவல்களை இங்கு வழங்கியுள்ளேன். மேலும் பல உடல்நலம் தொடர்மிபான க்க தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.  Akshayan







24 May 2014

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புளையும் இல்லாமல் செய்தல்

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புளையும் இல்லாமல் செய்தல்

டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். 


மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதனால் அந்த தழும்புகளால் அழகு பாழாகிறது என்று பலர் வருத்தப்படுவதுண்டு. அதனால் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்தி, அதனைப் போக்குவதற்கு முயற்சிப்பதும் உண்டு. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ஆகவே அவ்வாறு க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிப்பதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்ப்போமா!!!
சந்தன ஃபேஸ் பேக் :
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :
சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.
வெந்தய ஃபேஸ் பேக் :
சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல் :
கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
தேன் மகத்துவம் :
கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.
எலுமிச்சை மருத்துவம் :
எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.
பன்னீர்/ரோஸ் வாட்டர் :
சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு :
ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
உடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள் :
எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.
காய்கறி ஜூஸ் அருந்துங்கள்:
ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்
க்ரீன் டீ :
உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.
தக்காளி:
ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.
ஐஸ் கட்டிகள்:
சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வதால், தேவையற்ற சதைகள் குறைந்து, எடை குறைவதுடன், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil) :
கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.
மேக் அப்புகளை உடனே நீக்கிவிடுங்கள் :
தினந்தோறும் மேக் அப் போடும் பழக்கம் உள்ளவரா? அப்படியென்றால், வீடு திரும்பியதும் உடனடியாக அவற்றைக் களைந்துவிட்டு, முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக் அப் சாதனங்களைத் தவிர்த்திடுங்கள்.
முகத்தை கைகளால் தொடாதீர்கள் :
முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால், அவை பெருகும். அதோடு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல்களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.

13 May 2014

கோடையில் குளிர்விக்கும் வெந்தயம்

கோடையில் குளிர்விக்கும் வெந்தயம்

சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இரவில் தூங்குவதற்கு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.
வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

19 March 2014

அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்

அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்

பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை எல்லாம் விட கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பல வீடுகளில் சுத்தப்படுத்துவதே கிடையாது என்பதுதான் அச்சம் தறும் செய்தியாகும்.

முதலில், கால் மிதியடிகள் : ஒரு கால் மிதியடியை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டால், பல இல்லத்தரசிகள் யோசித்துத்தான் பதில் சொல்வார்கள். ஆனால், கால் மிதியடிகள்தான் பல கிருமிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு அதனை நோயாகப் பரப்பி வருகின்றன.

அடுத்ததாக, கதவுகளின் கைப்பிடிகள். அதிலும் கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகள் கிருமிகளின் சொர்காபுரியாக இருக்கும். எனவே, பீரோ, பிரிட்ஜ், அறைக் கதவுகளின் கைப்பிடியை அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள்.

டிவி ரிமோட் : வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது ரிமோட்தான். எனவே, அதனை உலர்வான துணியைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தால், குழந்தைகளை பல நோய்களில் இருந்து காக்கலாம். ஏன் என்றால், ரிமோட்டை எடுத்து வாயில் வைத்து விளையாடும் குழந்தைகள் பல வீடுகளில் உள்ளன.

வீட்டை சுத்தப்படுத்தும் மாஃப். இதனை பயன்படுத்தியதும் அப்படியே எடுத்து உலர வைத்துவிடாமல், பயன்படுத்திய பிறகு, சோப்பு தண்ணீரில் நன்கு துவைத்து பிறகு சுத்தமான நீரில் அலசி உலர வையுங்கள்.

வீட்டில் குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட் மற்றும் ஜக்குகளை அடிக்கடி நன்கு தேய்த்து சூரிய வெளிச்சத்தில் காய வைப்பது மிகவும் அவசியமாகும்
முட்டைக் கோஸ்

முட்டைக் கோஸ்

உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

* வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு

மருந்தாகும் உணவு வகைகள்

மருந்தாகும் உணவு வகைகள்

* சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

* பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

* அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

* தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

* பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

* கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன



* சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

* சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

* வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

14 March 2014

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.
கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது.
கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.
சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை (cell and nuclear) உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும்போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.
சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும். இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.
சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:
அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். Xray. IVP மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.
சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?
மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம்.
முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது.
கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* தேநீர், பருப்புக் கீரை
* வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
* கேசரி பருப்பு
* மாம்பழம், சீதாப்பழம்
* அரைக்கீரை, முருங்கைகாய்
* தாமரைத்தண்டு, எள்
* பச்சைமிளகாய், நெல்லிகனி
உட்கொள்ள வேண்டியவை:
* நிறைய தண்ணீர்,
* பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
* கேழ்வரகு
* புழுங்கல் அரிசி
* பருப்பு, காய்ந்த பட்டாணி
* கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.

12 March 2014

உன்னத பலன்களை தரும் செவ்வாழை!

உன்னத பலன்களை தரும் செவ்வாழை!

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

09 March 2014

வெள்ளை பூண்டு -- மருத்துவ குணம்.

வெள்ளை பூண்டு -- மருத்துவ குணம்.

       வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் 

பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.
பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.
பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.
கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.
பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.
பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.
இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.
எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.
பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.
பூண்டுரசம் கபத்தை நீக்கும்.
குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.
பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.
பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.
பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.
பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.
வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.
பூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.
பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.
பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.
வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.
பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.
பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.
பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.
பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.
அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.
பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.
பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.
பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.
காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.
பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.
பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.
பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்

07 March 2014

ஞாபக மறதியைத் தடுக்கும் உணவுகள்!

ஞாபக மறதியைத் தடுக்கும் உணவுகள்!

               நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல
நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோகள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

தானியங்கள் மற்றும் நட்ஸ்

தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

கடல் சிப்பி

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சாக்லெட்

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

காபி

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்

03 March 2014

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும்.
இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. இப்போது அந்த பாகற்காய் மூலம் கிடைக்கும் ஏராளமான பலன்களில் ஒரு சிலவற்றைப் பற்றி பார்க்கலாமா!!!

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

01 March 2014

ஞாபக மறதியில் இருந்து விடுபட..

ஞாபக மறதியில் இருந்து விடுபட..

*பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் உளவியல் நிபுனர்கள்
*மறதி என்பது ஒரு நோய் அல்ல.இதற்கு பல காரணங்கள் உள்ளன.அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது.

*நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.

*மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல்.இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

*இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல்.

*பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல். இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.

*ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

*கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம். நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக ‘அல்சைமர்’ நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர். புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும்.

*ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும். தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும்.

*இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

பாதுகாப்பு முறை:


*ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை. வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை.

*இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.

*இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம். அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம்.

*எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம். அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம்.

*செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

25 February 2014

வல்லாரை - மருத்துவ குணங்கள்

வல்லாரை - மருத்துவ குணங்கள்

இக்கீரையின் சத்துக்கள்:

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.

6. வல்லாரையில் இருவகை உண்டு:
சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.

7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்:

1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
8. கண் மங்கலை சரி செய்யும்.
9. சீத பேதியை நிறுத்தும்.
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

23 February 2014

நீங்கள் கணினி உபயோகிபாளர்களா ? கண்களைப் பாதுகாப்பதற்கு….

நீங்கள் கணினி உபயோகிபாளர்களா ? கண்களைப் பாதுகாப்பதற்கு….

ணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணினியோடு படுத்து உறங்குகிறார்கள்.

Computer Vision Syndrome(சி.வி.எஸ்) என்று சொல்லக் கூடிய ஒரு பாதிப்பு கணினியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த Computer Vision Syndrome-ன் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும் முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால் கணினியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்து விடுவது தான் என்று தெரியவருகிறது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை(14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கணினியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது.
மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
1. Monitor மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி screen விற்கிறது. இதை வாங்கி உங்கள் Monitor-க்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள்.

2. கணினியும் நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி, கழுத்துவலி வந்து விடும். கவனமாக இருங்கள்.

உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி Monitor இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், Monitorக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.

3. தொடர்ந்து Monitor பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.

4. தொடர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் உங்கள் பார்வையை வேறு பக்கம் மற்றுங்கள்.

5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் Monitor-லிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.

6. கணினியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது.

22 February 2014

வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்க!

வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்க!

நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது.
இதனை தான் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.

பயிறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட்களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத்தையும் கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.

உதாரணமாக பாசிப் பயிறுகளை உணவில் அதிகளவில் சேர்க்கும்போது ரத்த சோகை, நரைமுடி ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. கர்ப்பிணிகள் அதிகளவில் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது குழந்தைக்கும் சேர்த்து நல்லது. வெந்தயம் சர்க்கரைநோய்க்கு அருமருந்து இதனை வெறுமனே வாயில் போட்டு தண்ணீரை குடிக்கலாம். மேலும் முளைகட்டி அவற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். முளைகட்டிய 25 கிராம் வெந்தயத்துடன் 5 சிறிய வெங்காயம், ஒரு கேரட் ஆகியவற்றை பொடி செய்து சேர்த்து உட்கொள்வது நல்லது.

தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்னைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம். கொள்ளு ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கொழுப்பு குறைந்து உடலில் சக்தி அதிகரிக்கும். கொண்டைக்கடலையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் வலிமை பெறும்.எள்ளுவை நன்றாக தோல் நீக்கி அவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வை குறைபாடுகள் முற்றிலும் அகலும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எள்ளு மிகவும் ஏற்ற மருந்தாகும்.

21 February 2014

உடல் நலம் காக்க சில குறிப்புக்கள்

உடல் நலம் காக்க சில குறிப்புக்கள்

* சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய   கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.


*  தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

 * சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம். 

*   செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும். 


* தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும். 

*  மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். 


*  இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம். 


*  அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும். 


  *எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும். 


*  உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும். 


*  குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.