Showing posts with label வெல்லாவெளி. Show all posts
Showing posts with label வெல்லாவெளி. Show all posts

06 May 2013

வயோதிபப் பெண்ணின் கடை எரிப்பு

வயோதிபப் பெண்ணின் கடை எரிப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிய கடை ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காக்காச்சுவட்டைக் கிராமத்தின் சந்தியில் அமைந்திருந்த சிறிய கடையொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் காக்காச்சுவட்டைக் கிராமத்தினைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

வழக்கம்போல் தமது வீட்டிலிருந்து இன்று காலை விற்பனைக்காக பொருட்களை எடுத்து வந்து பார்கையில் கடை எரிந்து கிடப்பதையிட்டு பெரும் கவலையடைந்துள்ளார்.

இருந்தபோதிலும் தமது வியாபாரத்தினை அருகிலுள்ள மரத்தின் கீழிருந்து தற்போது நடாத்தி வருகின்றார்.

வெல்லாவெளிப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வானது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன், மனவருத்தப்படக்கூடியதுமாகும். இன்று உலகில் எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளபோதிலும் மற்றையவர்களின் விடயங்களில் தலையிடுகின்ற நிலைமைகள் இருந்துகொண்டுதான்  இருக்கின்றன. இதுவும் மிகவும் கீழ்த்தரமாக வறியவர்களின் வாழ்வில் கைவைக்கின்ற ஈனர்களின் செயல்கள் மலிந்தகொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பிட்ட வயோதிபப் பெண்ணின் கடையை எரித்ததனூடாக அந்த ஈனர்கள் அடைந்த இலாபம்தான் என்ன? என்றால். பிச்சை எடுக்காமலும், சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிக்காமலும் குறித்த பெண் தன்சொந்தக் காலில் உழைத்துவரும்போது அதனை தடுக்க நினைக்கும் இத்தகைய கயர்களை சமூகம் இனங்கண்டுகொள்வதுடன், இத்தகையவர்தகளை சட்டன்முன் நிறுத்தி தக்கதண்டனையும் குறித்த வயோதிபப் பெண்ணிற்கு நஸ்டஈடும் வழங்கி வைக்கவேண்டும்.