Showing posts with label குமாரவேலியார் கிராமம். Show all posts
Showing posts with label குமாரவேலியார் கிராமம். Show all posts

14 April 2014

"அப்பா" குறும்பட விமர்சனம்

"அப்பா" குறும்பட விமர்சனம்

தாயில்லாத பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து உயர் பதவியை அடைய வைக்க பாடுபடும் தகப்பனின் கதையே இந்த  “அப்பா” குறும்படம் ஆகும்.


 அதிகாலையிலேயே நேரத்துக்கு எழுந்து சிறு வருமானம் தரும் வேலைகளை முடித்து விட்டு மகனுக்கான தேனீர் போட்டு கொடுக்கின்றார் அந்த அப்பா இவ்வாறான ஒரு அப்பா இன்று பெரும்பாலும் யாருக்கு உண்டு ஆனால் அந்ந மகனோ எடுத்தவாறில் “மா கலந்த  தேனீர் போடவில்லையா ”என்று  அந்ந தந்தையின் பாசத்தை உதாசினப்படுத்துகின்றான்.அத்தோடு நின்று விடாமல் பணம் பணம் என்று கேட்கும் போது எல்லாம் அந்த தந்தை குனிகுறுகின்றார். என்றாலும் தன் பிள்ளை ஒரு நாள் பெரிய ஆளாக வந்துவிடுவான் என்கின்ற நம்பிக்கையில் கடன்களை வாங்கி கொடுக்கின்றார்.

கடன்வாங்கி  பணத்தை மகனிடம் கொடுத்தால் மகனோ கடை ஒன்றிற்குச் சென்று சிகரட் வாங்கி குடித்து விட்டு எஞ்சிய மீதியை கடையின் முன்னுள்ள குப்பை கூடையில் இட்டு  செல்கின்றான். இதை அறியாமல் அந்த தந்தையோ அக் குப்பை கூடையினை சுத்தம் செய்கின்றார்.அம் மகன் சிகரட் புகைப்பதோடு மட்டும் நின்று விடாமல் நண்பர்களுடன் இணைந்து மது பானங்களையும் அருந்துகின்றான்.மீண்டும் மதுபான கடைக்குச் சொல்லும் அம் மகன் செல்லும் போது தந்தையின் நண்பரிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றான்.தந்தையின் நண்பரோ தம்பி “உங்க அப்பா ரொம்ப கஷ்ட பட்டு வேலை செய்து படிக்க வைக்காரு நீங்களோ இப்படி மதுபானக் கடையில் ” என்று அறிவுரைகளைக் கூறினார்.அவ்வாறு அப்பாவின் நண்பர் அறிவுரை கூறியும் வீட்டிற்கு வந்து மீண்டும் பணம் கேட்கின்றான் அந்த மகன்.

மகன் பணம் கேட்டதும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கடன் வாங்க போடியாரிடம் கடன் கேட்கின்றார்.போடியாரோ “உன்ட மகனையும் உதவிக்கு கூப்பிடன் ”என்று கூற அந்த அப்பாவோ “அவன் பெரிய எஞ்சினியரா வந்திருவான் அதுக்கு பிற எனக்கு என்று சொல்லுகிறார்.போடியாரோ பின்னேரம் கொஞ்சம் வீட்ட வா மலசலகூடம் ஒன்றை சுத்தம் செய்ய வா  என்று கூறி பணத்தை கொடுக்கினறார்.அப்பாவும் பணத்தை  மகனிடம் கொடுக்க (தந்தை எப்படி கஷ்டபடுகின்றார் என்பதை புரிந்து கொள்ளாமல்)பெற்றுச் செல்கின்றான்.

நண்பனோடு மீண்டும் மதுபான கடைக்குச் சென்று மதுபானத்தை வாங்கும் போது தந்தையே கண்டு விடுகின்றார் ஆனால் பெருந்தன்மைமிக்க தந்தையோ கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றார். ஆனாலும் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் காரணமாக இனியவாது ஒழுங்காக கல்வி கற்போம் என்று மகன் செயற்படும் போது வேலை செய்து கொண்டிருக்கும் போது பிள்ளையின் போக்கை நினைத்து அப்பாவின் உயிர் பிரிகின்றது.

இக்குறும் படத்தில் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிக்கவில்லை உண்மையாக வாழ்ந்திருக்கின்றார் என்றே கூறவேண்டும் அத்தோடு ஏனைய நடிகர்களும் தங்களது பங்குகளை சிறப்பாக செய்திருந்தனர்.

ஆனால் உடை அமைப்புக்களில் சற்று கவனம் செலுத்திருக்கலாம் என்று கருதுகின்றேன்.போடியாராக நடித்தவர் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம்.

ஒளிப்பதிவுகள் சிறப்பு ஆனால் ஒலிப்பதிவுகளில் சிறு இடங்களில் தவறு ஏற்பட்டுள்ளது போலும் உதாரணமாக மதுபானக்கடையில் அப்பாவின் நண்பர் அறிவுரை கூறும் போது சில தவறுகள் ஏற்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் சிறப்பாக செயற்பட்டுள்ளார்.இவர் தென்னிந்திய இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசைப்பானியினை பின்பற்றியது போல் தோன்றுகின்றது.

இக்கதையினை எழுதி உயிர் கொடுத்த இயக்குனர் நடிகர் தெரிவுகளை மேற்கொண்டுள்ளார்.அத்தோடு தற்போது எமது பிரதேசங்களில் நடக்கும் உண்மை சம்பங்களைக் கொண்டு கதையினை உருவாக்கியுள்ளார்.

அப்பா - நிஜம்


ஒரு கலைக்குழுவின் வளர்ச்சிக்காக இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.


07 April 2014

"அப்பா" குறும்படத்தின் முழுமையான காணொளி

"அப்பா" குறும்படத்தின் முழுமையான காணொளி

அப்பா” குறும்படம் அருமையான படைப்பு “அப்பா” வை குறியீடாக வைத்து பிள்ளைகளின் வழிதவறிச் செல்லும் நிலைக்கு முற்றுப்புள்ளியிடத்தக்க முயற்சியாக அது அமைந்துள்ளது.  மட்டக்களப்பின் குமாரவேலியார் கிராமம் எனும் ஒரு கிராமத்திலிருந்து உருவாகியுள்ள இந்தப் படைப்பின் வெளியீட்டு விழாவானது அண்மையில் செங்கலடி செல்லம் திரையரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Appa full tamil shortfilm






22 March 2014

அப்பா - குறும்படவெளியீடு

அப்பா - குறும்படவெளியீடு

குமாரவேலியார் கிராமத்து கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகிய அப்பா திரைப்படம் எதிர்வரும் 30.03.2014 அன்று பிற்பகல் 3 மணியளவில் திரையிடப்படவுள்ளது. செங்கலடி செல்லம் திரையரங்கில் இடம்பெறவுள்ள இக் குறும்பட வெளியீட்டிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் மௌனகுரு அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். 


அனைவரையும் வருகை தந்து தமது ஆதரவை வழங்குமாறு திரைப்படத்தின் கலைஞர்கள் அன்புடன் வரவேற்கின்றார்கள்.



07 February 2014

"அப்பா" - குறும் திரைப்பட முன்னோட்டம்

"அப்பா" - குறும் திரைப்பட முன்னோட்டம்

(Vithusan) குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள  அப்பா எனும் குறும் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் குறும்படம் வெளியிடப்படவுள்ளதாகவும், திரைப்படக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.





முன்னோட்டம்


23 January 2014

நாடகமும் அரங்கக் கலையும் கற்கும் மாணவர்களுக்கான நூல்

நாடகமும் அரங்கக் கலையும் கற்கும் மாணவர்களுக்கான நூல்

நாடகமும் அரங்கக் கலையும் கற்கும் மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆசிரியர் ஆ.சிறிதரன் அவர்களால் அரங்கப்பாடல்கள் எனும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. 


குமளா வெளியீட்;டகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலினை ஆசிரியருடன் தொடாபுகொண்டோ அல்லது ஹனுமந்தா பிறிண்டர்ஸ் மூலமோ பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆசிரியர்: ஆ.சிறிதரன் - 0779185526
ஹனுமந்தா பிறிண்டர்ஸ் - 0652241300



20 January 2014

விரைவில் வெளிவரவிருக்கும் "அப்பா" குறும்திரைப்படம்

விரைவில் வெளிவரவிருக்கும் "அப்பா" குறும்திரைப்படம்

குமாரவேலியார் கிராமத்துக் கலைஞர்களின் பங்களிப்புடன் "அப்பா" எனும் குறுந்திரைப்படம் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கின்றது.


தந்தை, மகன் என இரு பிரதான பாத்திரங்களையும் துணைப்பாத்திரங்களையும் கொண்ட இத்திரைப்படத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நாடகம் அரங்கியல் பாட ஆசிரியரான ஆறுமுகம் - சிறிதரன் அவர்கள் அப்பாவாகவும், மகனாக எஸ். அகிலன் அவர்களும் நடித்துள்ளனர். 
கதையாக்கம் மற்றும் இயக்கம் -T. விதுசன்,  தயாரிப்பு - T.நிலோசன், படப்பிடிப்பு - விவியன் திறிசான் மற்றும் செல்வகுமார், எடிட்டர் - துசாந்த் பற்குணன், இசை - சஞ்சித் லக்ஸ்மன், போஸ்டர் - சபேஸ் ஆகியோர் இத்திரைப்படத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றனர். 
படத்தினுடைய  வேலைகள் யாவும் முடிவுற்றுள்ள நிலையில் இம்மாதத்தின் இறுதிக்குள் குறும்படத்தை செங்கலடியில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

14 December 2013

குமாரவேலியார் கிராமத்திலிருந்து "அப்பா" எனும் குறுந்திரைப்படம்

குமாரவேலியார் கிராமத்திலிருந்து "அப்பா" எனும் குறுந்திரைப்படம்

குமாரவேலியார் கிராமத்துக் கலைஞர்களின் பங்களிப்புடன் "அப்பா" எனும் குறுந்திரைப்படம் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கின்றது.

தந்தை, மகன் என இரு பிரதான பாத்திரங்களையும் துணைப்பாத்திரங்களையும் கொண்ட இத்திரைப்படத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நாடகம் அரங்கியல் பாட ஆசிரியரான ஆறுமுகம் - சிறிதரன் அவர்கள் அப்பாவாகவும், மகனாக எஸ். அகிலன் அவர்களும் நடித்துள்ளனர். 

கதையாக்கம் மற்றும் இயக்கம் -T. விதுசன்,  தயாரிப்பு - T.நிலோசன், படப்பிடிப்பு - விவியன் திறிசான் மற்றும் செல்வகுமார், எடிட்டர் - துசாந்த் பற்குணன், இசை - சஞ்சித் லக்ஸ்மன், போஸ்டர் - சபேஸ் ஆகியோர் இத்திரைப்படத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றனர். 

கடந்த ஒருமாதகாலமாக குறும்படத்திற்குரிய காடசிகள் செங்கலடி நகர், பதுளை வீதி பிரதேசம், குமாரவேலியார் கிராமம் ஆகிய இடங்களில் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. தற்போது பின்னணி மற்றும் இசை என்பன சேர்க்ப்பட்டு எதிர்வரும் தை (ஜனவரி) மாதமளவில் இதனை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆசிரியர் சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.

ஒரு கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது கிராமத்தில் முக்கியமாகக் காணப்படும் சமூக ரீதியிலான பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் இத்தகைய கலைஞர் குழு தொடர்ந்தும் தமது கலைப்பயணத்தில் பயணிக்கவேண்டும் எனவும் கூறி எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம்.