இடிமின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்

•    மிகக்குறுகிய நேரத்தில் தாக்கும் மின்னல் தாக்க பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். எனவே மின்னல் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு எம்மத்தியில் அறிந்திருப்பதுடன், அவற்றை இனம் காணுவதுடன் அவற்றின் பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய வழிகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில் அனர்த்தத்திற்கு முன்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அனர்த்த வேளையின்போதான நடவடிக்கைகளையும நாம் முறையாகக் கடைப்பிடிக்கின்றபோது இவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.

•    இடிமின்னல் பொதுவாக ஏற்படுகின்ற காலப்பகுதியை அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் காலரீதியில் பார்க்கின்றபோது மார்ச், ஏப்பிரல், ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மற்றும் மேற்காவுகைமழை, சூறாவளி மழைக் காலப்பகுதிகளிலுமே ஏற்படுகின்றது. எனவே அத்தகைய காலங்களில் நாங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
•    வானிலை அவதானிப்பு நிலையங்களால் வெளியிடப்படும் வானிலை எதிர்வுகூறல்களை செவிமடுத்தல். சில வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்படும்போது இந்நாட்களில் நாம் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
•    இடிமின்னலானது ஏதாவதொரு பொருளுக்கூடாக புவியில் கடத்துகின்றது. சில வேளைகளில் உங்கள் வீடுகளுக்கு அருகில் மரங்கள் ஏதாவது இல்லையெனில் வீட்டை நேரடியாக தாக்கலாம். எனவே வீடுகளுக்கு அருகில் உயரமான மரங்களை வளர்க்கவேண்டும். இதன்மூலம் மின்னல் தாக்கமானது மரத்தினூடாகக் கடத்தப்பட்டு எமது வீட்டிற்குரிய பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
•    உயர்ந்த கட்டங்களில் இடிதாங்கியை அமைத்தல் வேண்டும். இதன் மூலம் இடிதாங்கிகள் மின்னல் தாக்த்தை அயற்புறத்திற்கு விடாது தாம் தாங்கிக் கொள்வதுடன் அதனால் கட்டடங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுத்தும் விடுகின்றன.
•    இடிமின்னல் வேளைகளில் திறந்த வெளிகளில் நிற்பதையோ அல்லது விளையாடுவதையோ அல்லது வயல்களில் வேலைசெய்துகொண்டிருப்பதையோ தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அந்தப் பரந்த வெளியில் உயர்ந்த பொருளாக நீங்களே இருக்கும்போது நேரடியாக மின்னல் தாக்கலாம்.
•    சந்தர்ப்பவசத்தால் வெட்டவெளியில் இருக்கநேர்ந்தால் மின்னலின்போது தரையில் படுத்துவிடாதீhகள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பினை இயலுமானளவில் குறைத்துக்கொள்ளக்கூடிய வகையில் குந்தி அமருங்கள் . இதனால் ஓரளவேனும் மின்னல் தாக்கத்தின் பாதிப்பை குறைக்கலாம்.
•    இடிமின்னல் வேளைகளில் தொலைபேசிக் கோபுரங்கள், உலோகக் கொடிக்கம்பங்கள் , திறந்த ஒதுக்கிடங்கள் அருகாமையில் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உயரமான மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மரங்களை நோக்கி இலகுவில் மின்னல் கடத்தப்படக்கூடியது ஆகும்.
•    மூடப்படாத வாகனங்களில் இடிமின்னல் காலங்களின்போது செல்வதைத் தவிர்;க்கவேண்டும். குறிப்பாக துவிச்கரவண்டி, மோட்டார் வண்டி போன்றவற்றிலோ அல்லது உழவு இயந்திரங்களிலோ செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
•    வீட்டிலுள்ள மின்தொடர்புகள், அண்டனா தொடர்புகளைத் துண்டித்தல் வேண்டும். தொலைக்காடசிகள், கணனிகள், மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்பவற்றை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவேண்டும். இல்லெயெனில் அவை உயர் மின்சார தாக்கத்தினால் பழுதடைந்துவிடும்.  தொலைக்காட்சி மற்றும் நிலத்தொலைபேசிகளுக்குரிய அண்டனாக்களின் தொடர்பையும் துண்டித்தல் வேண்டும். மேலும் எந்தவிதமான ஆளிகளை அழுத்தும் செயற்பாடுகளையோ அல்லது மின் உபகரணங்கபை; பயன்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும்.

Previous Post Next Post