ஜப்பான் கராத்தே தோ சோட்டோகான் (JKSSA) கழகத்தின் கிழக்கு மாகாண கிளைக்குரிய பெல்ட் தரப்படுத்தல் நிகழ்வு 29.08.2025(சனிக்கிழமை) மட்டக்களப்பு, கிரான் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
கராத்தே கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் கியோஷி எச்.எம்.விஜயகுமார (8th Dan , Balack Belt. Japan) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.N..நேசகஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்குரிய JKSSA கழகத்தின் கறுப்புப் பட்டி பயிற்றுவிப்பாளர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.





