11 January 2013

வெள்ள அச்சத்தில் சித்தாண்டியில் பாடசாலை விடுமுறை

SHARE
உறுகாமம் குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், சந்தணமடு ஆடு(முந்தணி ஆறு)  மற்றும் மியான்கல் ஆறு ஆகியவற்றின் நீரேந்து பிரதேசங்களில் கிடைத்த அதிக மழைவீழ்ச்சியினாலும் சித்தாண்டி பிரதேசத்தை நோக்கி நீர் வந்துகொண்டிருக்கின்றது.

இதனால் சித்தாண்டியில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் , இராமகிருஸ்னர் வித்தியாலயம்,  மற்றும் உதயன்மூலை விவேகானந;தா வித்தியாலயம் ஆகிய பாடசலை மாணவர்களுக்கு இன்று 8.30 மணியுடனே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user