13 January 2013

மாவடிஓடை பாலம் உடைந்துள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் முந்தணி ஆற்றுக்கு குறுக்கே மாவடிஓடை எனும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாவடிஓடை பாலம் உடைந்து இரண்டாக பிளவுபட்டுள்ளது. மட்டக்களப்பில் பெய்த கடும் மழையினால் முந்தணி ஆறு கரைபுரண்டு ஓடியதனால் இந்தப் பாலம் உடைந்துள்ளது. 
மாவடிஓடை பாலம் உடைந்துள்ளமையினால் ஈரலக்குளம், விற்பனமடு, புலுட்டுமானோடை, நவுண்டிளியாமடு முதலிய  விவசாயக் குடியிருப்புகளுக்குரிய தரைவழிப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாவடிஓடை பகுதியில் புதிதாக ஒருபாலம் நிர்மானிக்கப்பட்டு வந்தமையும், தற்போது அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










  
SHARE

Author: verified_user