மாவடிவேம்பு கிராமத்தில் வசித்து வந்த ஒரு குழந்தையின் தாயான கிருஸ்ணப்பிள்ளை - நிர்மலா என்ற சுமார் 25 வயதுடைய பெண் கடந்த 29.09.2013 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடபாக மேலும் தெரியவருவது,
கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு அன்றைய SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் " தூக்கிட்டு தற்கொலைசெய்யப்பாகிறேன்" என்று கூறியிருக்கின்றார்.
பின்னர் கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டு வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் ,உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில் தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண் அமரத்துவமடைந்த முன்னாள் மாவடிவேம்பின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கண்ணப்பன் மற்றும் சிவகாமி ஆகியோரின் பேத்தியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி : மடவள நியுஸ்)






