கடந்த 26.12.2004 அன்று இலங்கையில் சுமார் 40000 பேர்வரையில் ஒரே நாளில் பலியெடுத்த நிகழ்வாக சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 9 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இன்று இலங்கையின் பல பாகங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
Tsunami Memorial Song
• 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் இந்துசமுத்திரத்தில் சுமாத்திரா தீவிற்கு மேற்கே சுமார் 150 கிலோமீற்றரில் 9.0 றிச்டர் அளவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஒரு புவிநடுக்கம் உருவாகியது.
• உருவாகிய புவிடுக்கத்தினால் ஏற்பட்ட சமுத்திர அலைகள் பல நாடுகளைத் தாக்கியது. இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஸ், சோமாலியா முதலிய நாடுகள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கின. இச் சுனாமி பேரலையால் 350000 பேருக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
• இலங்கையில் இச்சுனாமிப் பேரலையின் காரணமாக 35399 பேர் உயிரிழந்ததுடன், 1.25 மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது.