குமாரவேலியார் கிராமத்திலிருந்து "அப்பா" எனும் குறுந்திரைப்படம்

குமாரவேலியார் கிராமத்துக் கலைஞர்களின் பங்களிப்புடன் "அப்பா" எனும் குறுந்திரைப்படம் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கின்றது.

தந்தை, மகன் என இரு பிரதான பாத்திரங்களையும் துணைப்பாத்திரங்களையும் கொண்ட இத்திரைப்படத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நாடகம் அரங்கியல் பாட ஆசிரியரான ஆறுமுகம் - சிறிதரன் அவர்கள் அப்பாவாகவும், மகனாக எஸ். அகிலன் அவர்களும் நடித்துள்ளனர். 

கதையாக்கம் மற்றும் இயக்கம் -T. விதுசன்,  தயாரிப்பு - T.நிலோசன், படப்பிடிப்பு - விவியன் திறிசான் மற்றும் செல்வகுமார், எடிட்டர் - துசாந்த் பற்குணன், இசை - சஞ்சித் லக்ஸ்மன், போஸ்டர் - சபேஸ் ஆகியோர் இத்திரைப்படத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றனர். 

கடந்த ஒருமாதகாலமாக குறும்படத்திற்குரிய காடசிகள் செங்கலடி நகர், பதுளை வீதி பிரதேசம், குமாரவேலியார் கிராமம் ஆகிய இடங்களில் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. தற்போது பின்னணி மற்றும் இசை என்பன சேர்க்ப்பட்டு எதிர்வரும் தை (ஜனவரி) மாதமளவில் இதனை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆசிரியர் சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.

ஒரு கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது கிராமத்தில் முக்கியமாகக் காணப்படும் சமூக ரீதியிலான பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் இத்தகைய கலைஞர் குழு தொடர்ந்தும் தமது கலைப்பயணத்தில் பயணிக்கவேண்டும் எனவும் கூறி எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம். 



Previous Post Next Post