20 January 2014

குடியிருப்பு புவியியல் நூல் வெளியீட்டு நிகழ்வு

SHARE
உயர்தர மாணவர்களின் புவியியல் பாடத்திட்டத்தில் உள்ள குடியிருப்பு எனும் பகுதியை அடிப்பபடையாகக் கொண்டு நூலாசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட குடியிருப்பு (மானிடப் புவியியல்) எனும் நூல் நேற்றைய தினம் (19.01.2014) சித்தாண்டி – மாவடிவேம்பு தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் வெளியிடப்பட்டது.

கல்வியகத்தின் அலுவலக இணைப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிழ்வில் அதிதிகளாக சித்தாண்டி – மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராசா அவர்களும், சித்தாண்டி-1, மாவடிவேம்பு - 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்களும், ஆசிரியர்களான திருமதி ப.பரமேஸ்வரி அவர்களும், திருமதி வி.யோகேஸ்வரி அவர்களும்  கலந்துகொண்டனர்.

மேலும் இ;ந்நிகழ்வில் கல்வியக ஆலோசகர் சி.தில்லையன் , கல்வியக திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கல்வியகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.



















SHARE

Author: verified_user