22 May 2016

கோராவெளி கண்ணகி அம்மன் சடங்கு நிறைவு - 2016 (PHOTOS)

SHARE

மட்டக்களப்பின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கோராவெளி கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்திச் சடங்கானது நேற்றைய தினம் (21.05.2016) சிறப்பாக நிறைவுபெற்றது. 








கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த வெள்ள நிலைமையினால் பக்தர்களின் வரவு குறைவாக இருந்தபோதிலும், நேற்றைய தினம் உழவு இயந்திரங்கள் மற்றும் ஈருருளிகளின் மூலமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 





கோராவெளி கண்ணகி அம்மனின் ஆலயத்திற்கு அருகில் செல்கின்ற ஆற்றின் நீர்மட்டம் வழமையான உற்சவ காலத்தை விட சற்று அதிகமாகக் காணப்பட்டமையினால் கங்கையில் நீராடுபவர்களின் அளவும் குறைவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























































































SHARE

Author: verified_user