சூழல் தினம் 2012

வருடாந்தம் ஜுன் மாதம் 05 ஆம் திகதியன்று சர்வதேச சூழல் தினம் கொண்டாடப்படுகின்றது. 1972 ஆம் ஆண்டில் முதன்முதலாக சர்வதேசசூழல் தினக்கொண்டாட்டமானது  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சூழல்தின நிகழ்வுகளுக்கு பொறுப்பான அமைப்பாக ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டம்(UNEP) செயற்படுகின்றது. இவ்வருடம் 40 வது சூழல் தினம் உலகின் பல்வெறு நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. சூழல் தினத்தை பல்வேறு நாடுகள் கொண்டாடுகின்ற போதிலும், ஒவ்வாரு வருடமும் விசேடமாக முதன்மைக் கொண்டாட்டத்திற்குரிய ஒரு இடம் தெரிவு செய்யப்படும்.

2012 ஆம் ஆண்டிற்குரிய சூழல் தினமானது 'பசுமைப் பொருளாதாரம்'   எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது. மனித நலவாழ்வு மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடியதாகவும் சுற்றுச்சுழல் பாதிப்பு மற்றும் பற்றாக்குறையை தவிர்ப்பதாகவும் அமையக் கூடிய பொருளாதாரமே பசுமை பொருளாதாரம் எனப்படுகின்றது.
Previous Post Next Post