படிப்பக திறப்பு விழாவும், நூல்வெளியீடும் - 12.08.2012


தவசி லேணிங் சிற்றியில் கடந்த 12.08.2012 அன்று புனரமைக்கப்பட்ட படிப்பகத்திற்குரிய திறப்பு விழாவும், சூழல் முகாமைத்துவம் எனும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.கல்வி நிலைய நிருவாகம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்ததுடன், கல்வி நிலைய பிரதம ஆசிரியர் நிகழ்வுகளை தலைமையேற்று நடாத்தியிருந்தார்.



கிழக்குமுதல்வவரின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட படிப்பக திறப்பு விழா, மற்றும் சூழல் முகாமைத்துவம் எனும் நூல் வெளியீடு என்பவற்றுக்கு பிரதம அதிதியாக கிழக்கு முதல்வரின் செயலாளர் திரு. ஆ.தேவராசா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியை திரு. வதனிகமலநாதன், ஆசிரியர் திரு. தி.கமலநாதன், கி.அ.ச.தலைவர் சி.தில்லையம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுகளில் கல்வி நிலைய மாணவர்களது பெற்றோர்கள், கல்வி நிலைய பழைய மாணவர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் நிருவாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


குறைந்த கட்டணத்தில் கல்வி போதித்து வருகின்ற கல்வி நிலையங்களுள் தவசி லேணிங் சிற்றியும் ஒன்றாகும். இதனால் கல்வி நிலையத்தின் பொருளாதார வசதி குறைவாகும். இந்த நிலையில் எமது கல்வி நிலையத்தினுடைய நிலைமையை  அறிந்து இத்தனை வருடகாலமாக ஓலையினால் காணப்பட்ட நிரந்தரமற்ற எமது படிப்பகத்தினை கிழக்கு முதல்வர் கௌரவ சநதிரகாந்தன் அவர்கள் தமது கட்சியினுடைய நிதியிருப்பில் இருந்து ரூபாய் 50000 இனை ஒதுக்கி புனரமைத்து வழஙிகியிருந்தார்.
இந்த உதவிக்கு எமது கல்வி நிலையத்தின் சார்பில் நாம் எமது மனமார்ந்த நன்றிகளை அவருக்கும், கட்சிக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம். அதேவேளை எமது கல்வி நிலையத்தின் நிலைமையினை முதல்வருக்கு சிபாரிசு செய்து நடைமுறைப்படுத்திய முதல்வரின் செயலாளர் திரு. ஆ.தேவராசா அவாகளுக்கும் எமது நன்றிகள்.


























Previous Post Next Post