22 November 2012

சித்தாண்டி பிரதேசத்தில் சிரமதானம்

SHARE
சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இன்றைய தினம் (22.11.2012) காலை 08.00 மணியளவில் சிரமதான நிகழ்வொன்று கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலய அதிபர் க.பகீரதன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொ.வரதராஜா, க.சுப்பிரமணியம் , சித்தாண்டி 01 கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சா.மகேந்திரகுமார், மற்றும்  சிவில்குழு பொலிஸ் உத்தியோகத்தர் , சிவில் குழு உறுப்பினர்களான சி.திருப்பதி, இ.நித்தியானந்தம், ச.செந்தூரி மற்றும் சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வின்போது ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தென்னங்கன்றுகளும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.













SHARE

Author: verified_user