மூடப்பட்டுவரும் அவுஸ்ரேலியாவின் கடற்கரைகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்டுள்ளன.
ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன. நொக்டிலுகா 'noctiluca' எனப்படும் ஒரு வகை அல்காவினாலேயே கடல் சிவப்பாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர நீரில் ஒட்சிசனின் அளவும் குறைவதால் மீன்களும் இறக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீரின் வெப்பம் திடீரென அதிகரித்தமையே இதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைக்காலமாக பெய்த சிகப்பு மழைக்கும் ஒரு வகையான அல்காவே காரணமென ஆராய்சியாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




 (Thanks :- www.virakesari.lk)

Previous Post Next Post