09 December 2012

செங்கலடி மத்திய கல்லூரியில் பொலிஸ் நடமாடும் சேவை

SHARE
செங்கலடி மத்திய கல்லூரியில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் நடமாடும் சேவை நேற்றைய தினம் (08.12.2012) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான  சுபைர் அவர்களும்,  மாவட்ட வைத்திய அதிகாரி  பலீல் அவர்களும்  மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொப்பிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.
பொலிஸ்நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகள், கிராம உத்தியோகஸ்தரின் சேவைகள், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலகத்தின் சேவைகள் முதலியனவும் கிடைக்கப்பெற்றன.


















SHARE

Author: verified_user