04 May 2013

கிரானில் இடம்பெற்ற வாழ்வின் எழுச்சி மீளாய்வுக் கூட்டம்

SHARE
வாழ்வின் எழுச்சி (திவிநெகும)  தொடர்பிலான மீளாய்வு கூட்டம் நேற்று 03.05.2013 அன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலயகத்தில், பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு. தனபாலசுந்தரம் மற்றும்  பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்)  பிரதேச செயலகங்களின் திவிநெகும திட்டத்தின் விசேட இணைப்பாளர் ஆ.தேவராசா உட்பட பட்டதாரி பயிலுனர்கள். சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.
வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் பலாபலன்கள் இக்கூட்டத்தில் ஆராயப்ட்டதுடன், பயனாளிகளுக்கு வினைத்திறனான உற்பத்திச் செய்னமுறையினை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



SHARE

Author: verified_user