06 May 2013

வடிவேலுவின் அதிரடி மீள்பிரவேசம்

SHARE
நீண்டகாலமாக திரையில் தலைகாட்டாது ஒதுங்கியிரந்த நடிகர் வடிவேலு மிண்டும் தனது ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலான  "கஜ புஜா புஜ கஜா தென்னாலி ராமனும் கிருஸ்ணதேவராயரும்"   என்ற திரைப்படத்தில் மூலம் மீள்பிரவேசம் செய்கிறார். 


சுந்தர்சியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படமானது தனது ரசிகர்களுக்கு நிச்சயமாக தீனிபோடும் என்று கூறியிருக்கின்றார் வடிவேலு. வின்னர், கிரி, லண்டன், ரெண்டு, நகரம் ஆகிய சுந்தர்சி இயக்கிய திரைப்படங்களில் வடிவேலு நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user