06 May 2013

சித்தாண்டி பட்டதாரி ஒன்றிய கலந்துரையாடல்

SHARE
சித்தாண்டி பட்டதாரி ஒன்றியத்தின் கலந்துரையாடல் இன்று பிற்பகல் 5.00 மணியளவில்  வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.  பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ம.பாஸடகரன் அவாகளின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சில முக்கிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.


1)  பாடசாலையிலிருந்து விடைபெற்றுச் சென்ற பழைய அதிபர் வ.பஞ்சலிங்கம் அவர்கள் மற்றும் கடந்த 2012 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினை நடாத்தல்.
2) பாடசாலையில் தற்போது காணப்படுகின்ற நிருவாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கம் ஆகியனவற்றின் செயற்பாடுகளை அவதானித்தல்.
3) உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அவதானித்தல்.

முதலிய நடைமுறைகள் ஆராயப்பட்டன. இதேவேளை இன்றைய தினம் பட்டதாரி உறுப்பினர்களின் வருகை குறைவாக இருந்தமையினால் எதிர்வரும் 26.05.2013 அன்று பிற்பகல் 4.00 மணியளவில்  முக்கியமான ஒன்றுகூடலை நடாத்துவது என்றும்  தீர்மானிக்கப்பட்டது.

SHARE

Author: verified_user