வாழைச்சேனையில் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்ட 1500 கிலோ எடைகொண்ட புலிச்சுறா, வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் 1,500 கிலோ கிராம் எடையுடைய பெரிய புலிச்சுறா மீன் ஒன்று அகப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.குறித்த புலிச்சுறா மீன் அண்ணளவாக 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் கொண்டுள்ளது என குறித்த படகின் உரிமையாளரான ஏ.எல்.எம்.முபாறக் தெரிவித்தார்.
இந்தப் பெரிய புலிச்சுறா மீனை பார்வையிடுவதற்கு அதிகமானோர் வருகை தருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த மீன் ஏலத்தில் விடப்பட்டு 69,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
