13 October 2013

வந்தாறுமூலை விபத்தில் குடும்பஸ்தர் பலி (#மேலதிக படங்கள்#)

SHARE
வந்தாறுமூலையில் இன்றையதினம் (13.10.2013) பிற்பகல் ஏற்பட்ட விபத்தொன்றில் சுமார் 45 வயதுடை குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இலங்கைப் போக்குவரத்துசபை பஸ் ஒன்று சைக்கிளில் வந்தவரான வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் , ஈரலக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் - உதயகுமார் என்ற நபருடன் மோதியதனாலேயே உயிரிழந்துள்ளார்.


வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு அருகாமையில் நிகழ்ந்த இவ்விபத்தில் அருகில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளது. 
(தகவல் மற்றும் படங்கள்:- சுதாகரன், வந்தாறுமூலை)



SHARE

Author: verified_user