18 November 2013

வருடாந்த பரிசளிப்பு விழா - 2013

SHARE
தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 16.11.2013 அன்று கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

கல்வி நிலையத்தின் ஸ்தாபகர் அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இவ்வருடம் இடம்பெற்ற பரீட்சைகளில் ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல்மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,  வருடாந்த சஞ்சிகையான பசுமை எனும் இதழும் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடம் கடந்த 7 ஆண்டுகள் இடம்பெற்ற கல்விப் பயணத்தில் பல்வேறு விதத்திலும் உதவி வழங்கியவர்களுக்கான உதவி  நினைவுகூரல்  உரையும் தலைமைஆசிரியரால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user