16 November 2013

மாணவர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய ஆசிரியர்

SHARE
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் அவரின் மாணவர்கள் நான்கு பேரும் கல்லடி கடற்கரை பிரதேசத்தில் மதுபானம் அருந்தி கேளிக்கை புரிந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் உயர் தரம் கற்கும் நான்கு மாணவர்களுடன் சேர்ந்த கல்லடி கடற்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார்.


அந்தவேளையில் அப்பகுதியால் சென்ற நான்கு மாணவர்களின் தந்தையருள் ஒருவர் இது தொடர்பில் மறுதினம் குறித்த பாடசாலையின் அதிபரிடம் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அந்த ஆசிரியரை அழைத்து விசாரித்தபோது பாடசாலை வேளையில் நாங்கள் ஏதும் தவறுசெய்தால் நீங்கள் கேட்கலாம்.விடுமுறை நாட்களில் நாங்கள் செய்வதை நீங்கள் கேட்க தேவையிலையென அதிபரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாதா,பிதாவுக்கு அடுத்த படியாக இறைவனுக்கு மேலாக போற்றப்படும் குருவான ஆசிரியர்கள் எமது இளம் சமூதாயத்தினை சீர்குலைக்க நினைப்பது வேதனையளிப்பதாக அந்த பிரபல பாடசாலை அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொது அமைப்புகள்,சிவில் பாதுகாப்பு அமைப்புகளும் கவனத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
SHARE

Author: verified_user