14 November 2013

வந்தாறுமூலை எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் விபத்து

SHARE
மட்டு திருமலை பிரதான வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் இன்று காலை சுமார் 8.00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கரவண்டியும், உந்துருளி ஒன்றும் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் மாவடிவேம்பு வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
(தகவல், படங்கள்: சுதாகரன், வந்தாறுமூலை)






SHARE

Author: verified_user