30 November 2013

சித்தாண்டியில் வளர்ந்துவரும் ஓவியர்

SHARE
சித்தாண்டி கிராமம் பல கலைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கிராமமாகும். ஆனால் சில கலைஞர்களைத் தவிர பெரும்பாலோனார் வெளியுலகிற்கு தெரிவதில்லை. அந்தவகையில் எமது இணையத்தளமானது சித்தாண்டி மற்றும் சூழவுள்ள பிரதேசத்திலுள்ள கலைஞர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் ஒருசில கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகின்றோம்.  கலைஞர்களோ அல்லது வேறுயாராவது கலைஞாகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றபோது நாம் நிச்சயமாக எமது தளத்தினூடாக அறிமுகப்படுதுவோம்.


அந்தவகையில் சித்தாண்டியில் வளர்ந்துவரும் ஓவியர் ஒருவரை  இன்று நாம் எமது தளத்தினுடாக அறிமுகம் செய்து  வைக்கின்றோம்.  ஓவியங்கள் வரைவதில் வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞராக சித்தாண்டி -04 இல் வசித்து வரும் எஸ் நந்தகுமார் என்பவர் விளங்குகின்றார். இக்கலைஞருக்கு எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 







SHARE

Author: verified_user