Showing posts with label கலைஞர்கள். Show all posts
Showing posts with label கலைஞர்கள். Show all posts

21 July 2023

வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம்

வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம்

 


ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைத்து நடாத்திய "வயலும் சோறும்" நிகழ்வானது 20.07.2023 வியாழக்கிழமை உதவிப்பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் மயிலவெட்டவான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.




















20 June 2020

உடைந்த பென்சில் - குறும்படம் (YouTube Link)

உடைந்த பென்சில் - குறும்படம் (YouTube Link)

நானிலம் கலைஞர் வட்டம் (மட்டக்களப்பு) "வறிய நிலையிலுள்ள மாணவர்களின்  மனநிலை" பற்றிய மையக்கருத்தை அடிப்படையக் கொண்டு இவ்வருடம் (2020) "உடைந்த பென்சில்" என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றை வெளியிட்டது. 

இக்குறும் படத்தினை அக்‌ஷயன் கதை எழுதி இயக்கியுள்ளர். இப்படத்தில; பங்களித்த கலைஞர்களில்   நேசம்மா, சபாரெத்தினம், தர்சன், நிதுசன், விதுர்சன், கிசாளன் ஆகியோரின் நடிப்பிலும், சுமனின் ஒளிப்பதிவு, தீபனின் ஒலிப்பதிவு, சிவா மற்றும் தில்லையன் ஆகியோரின் ஒப்பனை, தயாரிப்பு தேவன் மற்றும் விளம்பர உதவி பிரியன் ஆகியோரின் பங்களிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறுப்டங்களை எடுத்துவருகின்ற நானிலம் கலைஞர் வட்டத்தினரின் 7 ஆவது குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறும்படத்தின் YouTube இணைப்பானது கீழே தரப்பட்டுள்ளது. எனவே எமது குறும்படத்தைப் பார்வையிட்டு இதனைப் பகிர்ந்து உதவுவதுடன், உங்களுடைய மேலான கருத்துக்களை எமது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பியும் வையுங்கள். 

தொடர்புகளுக்கு: kudumbimalai@gmail.com


Youtube Link 



20 April 2018

குறும்பட வெளியீடும், புத்தக வெளியீடும்

குறும்பட வெளியீடும், புத்தக வெளியீடும்


நானிலம் கலைஞர் வட்டம் தயாரித்து வழங்கிய "அரக்கன் " எனும் குறும்படமும், நூலாசிரியர் த.பிரதீபன் அவர்களால் எழுதப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இந்துநாகரிகம் எனும் நூலும் இன்று (20.04.2018) வெளியிடப்பட்டது.



நானிலம் கலைஞர் வட்டத்தின் தலைவர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் தவசி லேணிங் சிற்றிய கல்வியத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆ.தேவராஜ் (ஆசிரியர்), சி.தில்லையன் (தலைவர், மாவடிவேம்பு சமூக அபிவிருத்தி ஒன்றியம்), நானிலம் கலைஞர்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.















































































12 December 2017

மாவட்ட இலக்கியவிழா 2017

மாவட்ட இலக்கியவிழா 2017








சிறந்த குறுந்திரைப்பட நெறியாள்கை விருது விவசாயி திரைப்படத்திற்க்காக மாவடிவேம்பு சத்தியசீலன் அக்சயன் அவர்களுக்கும் சிறந்த துணை நடிகருக்கான விருது விவசாயி திரைப்படத்தில் நடித்த சிவாங்கன் அவர்களுக்கும் மாவட்ட கலாச்சார அதிகாரசபையால் இன்று வழங்கப்பட்டது.
 பாடுமீன் 2017 விருதுகளை தம்வசப்படுத்திய புதிய தலைமுறை கலைஞர்களை மட்டு மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துவதோடு உங்கள் பயணம் தொடர் வெற்றிகளை பெறவேண்டும் எனவும் இறைவனை வேண்டுகிறோம்.

18 April 2017

1515 km தூரம் சைக்கிளில் சாதனை

1515 km தூரம் சைக்கிளில் சாதனை


வவுனியா மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் - பிரதாபன் எனும் சாதனைக் கலைஞன் இலங்கையைச் சுற்றி 1515 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் ஓடிக்கொண்டிருக்கின்றார். கடந்த 08.04.2017 அன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பயணமானது இன்றுடன் (18.04.2017) மீண்டும் வுவனியாவில் நிறைவுபெறவுள்ளது. 







"இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் ஓய்வூதியம்" எனும் கோரிக்கையை முன்வைத்து இந்த சைக்கிள் பயணத்தை அவர் ஆரம்பித்திருந்தார். 





இதற்கு முன்னர் கடந்த வருடம் மோட்டார் சைக்கிளில் இலங்கையைச் சுற்றி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.