16 November 2013

வாழைச்சேனை இந்துக் கல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் தரம் 6 தொடக்கம் 13வரையான மாணவர்களுக்கான 2012ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 13.11.2013 பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் க.தவராஜா தலைமையில் இடம்பெற்றது. 

இப் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கின் முதலாவது முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். 

ஏனைய அதிதிகள் வரிசையிலே கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் செல்வநாயகம் ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்-நிருவாகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கோறளைப்பற்று கோட்டத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் நாகலிங்கம் குணலிங்கம், ஓய்வு பெற்ற சேவைக்கால ஆலோசகர் பாலிப்போடி கணேசமூர்த்தி, பழையமாணவரும் பொறியியலாளருமான சோமசுந்தரம் முரளி, பழைய மாணவரும் சட்டத்தரணியுமான கந்தசாமி தயாபரன், பழைய மாணவனும் உதவி வங்கி முகாமையாளருமான நடராசா மதனசாந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். 

மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் ஆரம்பமான விழாவில் திறமையான மாணவ மாணவிகள் சிறந்த ஆசிரியர்கள் அதிபர் மற்றும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.















SHARE

Author: verified_user