அந்தவகையில் கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (30.12.2013) காலை 9.00 மணியளவில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.