30 December 2013

அலைமகள் வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு

SHARE
(சுமதரன்) கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள சித்தாண்டி , வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் இன்று (30.12.2013)  காலை 9.00 மணியளவில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.










SHARE

Author: verified_user