05 January 2014

மழையின்மையால் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்பு

SHARE
(Sutha-Sittandy)பருவகால மழை கிடைக்காத காரணத்தினால் மழையை நம்பி மேற்கொள்ளப்படும் மேட்டுநிலப் பயிர்ச்செய்கை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நிலக்கடலை, சோளன் முதலிய  பயிர்களை பருவகால மழையை நம்பி விதைத்துள்ள நிலையில் மழை பெய்யாதபோது பயிர்கள் வளர்ச்சி குன்றியதாகவும், சிலபயிர்கள் வாடுகின்ற நிலையிலும் காணப்படுகின்றன எனவும்  விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.  இதேவேளை கடந்த 03.01.2013 அன்று சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் மழைவேண்டி பட்டுச்சாத்தி விசேட வழிபாடகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 





SHARE

Author: verified_user