28 February 2014

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக மழை

SHARE
இன்று (2014.02.28) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 247.0மி.மீ. அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதேபோன்று அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளது. தீகவாவி குளத்தில் 110.3மி.மீ., இலுக்குச்சேனை 115.0மி.மீ., சாகமம் 108.6மி.மீ., அம்பாரை குளம் 63.5மி.மீ., எக்கல்ஓய 50.8மி.மீ., பன்னலகம குளம் 85.0மி.மீ., அட்டாளச்சேனை 60.3மி.மீ., றூபஸ் குளம் 53.3மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


இதேபோன்று மட்டக்களப்பு நகரில் 6.8மி.மீ., வாகனேரி 52.3மி.மீ., உன்னிச்சை 46.0மி.மீ., உறுகாமம் 38.5மி;மீ., மைலம்பாவெளி 39.5மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த காலநிலை எதிர்வரும் நாட்களிலும் படிப்படியாகக் குறைவடையும்.

க.சூரியகுமாரன்
வளிமண்டலவியல் திணைக்களம்
மட்டக்களப்பு
SHARE

Author: verified_user