24 February 2014

சித்தாண்டியில் யோகா பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

SHARE
மட்டக்களப்பு சித்தாண்டியில் யோகா பயிற்சி நிலையம் ஒன்று முதன்முறையாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரபல யோகா கலை நிபுணரும் சர்வதேச யோகா பயிற்சியாளருமான செல்லையா துரையப்பாவின் சிரேஸ்ட மாணவர்களினால் இந்த யோகா பயிற்சி முகாம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பயன்பெறும் வகையில் சித்தாண்டி சுவாமி நடராஜானந்தா ஜி சிறுவர் இல்லத்தில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல யோகா கலை நிபுணரும் சர்வதேச யோகா பயிற்சியாளருமான செல்லையா துரையப்பா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிலையத்தினை திறந்துவைத்ததுடன் யோகா பயிற்சியினையும் ஆரம்பித்துவைத்தார்.இதில் பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user