15 February 2014

கல்குடாவிஷேட கல்விஅபிவிருத்திக் குழு கூட்டம்

SHARE
கல்குடாவலயத்தின் விஷேட கல்விஅபிவிருத்திதொடர்பான கூட்டம் கல்குடாவலயக் கல்விபணிமனையில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமானசி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கிழக்குமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் S.புஸ்பகுமார, கிழக்குமாகாணகல்வி பணிப்பாளர் M.T.நிஸாம்,வலயக் கல்விபணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் உதவிகல்விபணிப்பாளர்கள்,அதிபர்கள், சேவைக்கால ஆலோசகர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். மிகநீண்டகாலமாக ஆசிரியர் தட்டுப்பாடு, பாடஒழுங்கமைப்பு உள்ளிட்டவிடயங்கள் தொடர்பாக இங்கு ஆழமாக ஆராயப்பட்டது.

புதிதாகஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும் பின்னர் அவர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுவது குறித்தும், தற்காலிக இடமாற்றம் போன்றவை தொடர்பாகவும் இதன் போதுவிஷேடமாகஆராயப்பட்டது.



SHARE

Author: verified_user