04 February 2014

களுவன்கேணி, புல்லுமலை மக்களுக்கு தகரங்கள் வழங்கி வைப்பு

SHARE
(Rajan) களுவன்கேணி , புல்லுமலை பிரதேசத்தில் வசிக்கும் தற்காலிக உறைவிடங்களைக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு தகரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 01.01.2014 அன்று ஏறாவூர் பற்று பிரதேச யெலகத்தில் இடம்பெற்றது.


முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட தகரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் முன்னாள் முதல்வரின் சார்பாக அவருடைய செயலாளர் திரு ஆ.தேவராஜா அவர்களும், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு உ.உதயசிறிதர் அவர்களும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு கங்காதரன் அவர்களும், சித்தாண்டி 04 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு ந.அருண் அவர்களும் மற்றும் களுவன்கேணி, புல்லுமலை பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user